அகத்தியர் பன்னிருகாண்டம் 256 - 260 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 256 - 260 of 12000 பாடல்கள்


256. அழியாது முப்பூவின் அருமையப்பா
    அதிதமாம் வழலையது காரத்தாலே
குழிதனிலே நெடுங்கால மிருந்திட்டாலும்
    குற்றமொன்றும் வாராது தேகம்பொன்னாம்
வழியோடே காயத்தை நிறுத்தலாகும்
    நிறத்தாலும் ஆவியது நிலைநில்லாது
பழியான சடலமது பாரில்மண்ணாம்
    பலகால மிருந்தாலு மழியுந்தானே.
    
விளக்கவுரை :


257. தானான வழலையது காரசாரம்
    தாக்கான சரக்கெல்லாம் நீற்றும்பாரு
கோனான யெனதையர் கிருபையாலே
    கொற்றவனே பற்பத்தின் போக்குசொல்வேன்
பானான மனோன்மணியாள் கடாட்சத்தாலே
    பாச்சடா நவலோகந் தன்னிற்றானும்
வேனான பற்பமது யேமமாகும்
    மிக்கான மாற்றதுவுஞ் சொல்லொண்ணாதே.

விளக்கவுரை :


258. ஒண்ணாது யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
    வுத்தமனே புலஸ்தியரே சொல்லக்கேளும்
நண்ணமுடன் வடிவேலர் தம்மிடத்தில்
    நாட்டமுடன் வெகுகால மடுத்திருந்தேன்
கண்ணபிரான் பெற்றதுபோ லடியேன்றானும்
    காசினியி லுபதேசம் பெறவேவந்தேன்
வண்ணமுடன் நாதாந்த சித்துதாமும்
    வணக்கமுடன் வேலவரை கேட்டார்தாமே.

விளக்கவுரை :


259. கேட்டவுட னடியேன்மேல் மனதுவந்து
    கேள்வியின் வுத்தாரச் சொற்படிக்கி
நீட்டமுடன் ஞானோப தேசந்தன்னை
    நெடுங்காலம் போதிப்பே னென்றுசொல்லி
வாட்டமுடன் வடிவேலர் சந்தோடித்து
    வாகுடனே அகஸ்தியர்க்கு வுபதேசங்கள்
கூட்டமுட னந்தீசர் முன்னதாக
    கூறுவார் வுபதேசங் கூறுவாரே.

விளக்கவுரை :


260. கூறவே வடிவேலர் அகஸ்தியர்க்கு
    குறிப்புடனே அகஸ்தியரும் மனதுவந்து
ஆறவே சகலகலைக் கியானமெல்லாம்
    அவனிதனி லறிவதற்கு குருவுமாகி
மீறவே சகலநூல் கியானவானாய்
    மிக்கான நூல்களுக்கு முதல்வனாக
மாறவே அட்சரத்துக் குடையோனாக
    மகத்தான அகஸ்தியரு முன்னின்றாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar