அகத்தியர் பன்னிருகாண்டம் 436 - 440 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 436 - 440 of 12000 பாடல்கள்


436. வருந்திடவே தென்பொதிகை சித்துதாமும்
    வண்மையுடன் வேதமுனி தன்னைப்பார்த்து
அருந்ததிக்கு வொப்பான ரிடியார்தாமும்
    அன்புடனே தாமுறைத்த காவியத்தை
பொருந்தவே எங்களுக்கு வுபதேசித்துப்
    பொங்கமுடன் நூலதனைக் கொடுத்தீரானால்
இருந்திடத்தில் நாமிருந்து தவசிமார்கள்
    எழிலாகக் காவியத்தைப் பார்ப்போம்தாமே.

விளக்கவுரை :


437. பார்ப்போமே யென்றுசொல்ல முனிவர்தாமும்
    பாங்குடனே நூல்கொடுத்தால் லோகமெல்லாம்
தீர்க்கமுடன் சித்துமய மாகிப்போகும்
    திறளான கருவிகர ணாதியெல்லாம்
ஏர்க்கவே யிதிலடக்க மனந்தங்கோடி
    எழிலாகக் வேதமுனி சொன்னவர்க்கு
ஆர்க்கவே யிதிலடக்க மனந்தங்கோடி
    அப்பனே பொய்யொன்று மில்லைதானே.

விளக்கவுரை :


438. தானான நூலதனைப் பாடியல்லோ
    சத்தியங்கள் மிகவாகச் செய்துமேதான்
கோனான வேதமுனி சொன்னவாக்கு
    குகைதனிலே வொளித்துவைத்தார் காவியத்தை
பானான சித்துமுனி வனேகம்பேர்கள்
    பாடுபட்டு வெகுவாக நூல்கேட்டார்கள்
மானான வேதமுனி வியாசர்தாமும்
    மார்க்கமுடன் நூல்கொடே னென்றிட்டாரே.

விளக்கவுரை :


439. என்றுமே தடுத்துமிகச் சொல்லும்போது
    எழிலான முனியாரும் மனதிரங்கி
வென்றிடவே நூலதனைக் கொடுத்துத்தானும்
    விருப்பமுடன் சாபமதை நிவர்த்திசெய்து
சென்றிடவே லோகத்தில் கர்மிகட்கும்
    சிறுவர்கட்கும் கபடுள்ள நெஞ்சுளோர்க்கும்
ஒன்றுமே காட்டாமல் புத்திகூறி
    உத்தமர்க்கு நூல்கொடுத்தார் முனிவர்தாமே.

விளக்கவுரை :


440. முனியான வியாசர்முனி மனமகிழ்ந்து
    உத்தமராஞ் சித்தர்கட்கு கிருபைகூர்ந்து
கனிவுடனே நூலதனைக் கையிலேந்தி
    கருணையுடன் மனதுவந்து பரிவுசொல்லி
தனியான காவியத்தை வெளிகாட்டாமல்
    தாரணியில் மர்மமா யிருந்துகொண்டு
புனிதனா யிருக்கவென்று வரமுந்தந்து
    புகழாக வாசீர்மஞ் செய்திட்டாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar