அகத்தியர் பன்னிருகாண்டம் 91 - 95 of 12000 பாடல்கள்
91. கொதித்தவுடன் தானிறக்கி யெடுத்துப்பாரு
கொற்றவனே பண்.... .... .............................
......... .......... .......... ........ ......... .............................
.... .... ..... ..... .... ... .... ......................................
........... ...... .... ............ ... .......... .............................
மாசற்ற தவளமது போலேயாகும்
கதிப்படியே பற்பத்தை யெடுத்துக்கொண்டு
சாங்கமுடன் சிமிழ்தனிலே பதனம்பண்ணே.
விளக்கவுரை :
92. பண்ணவே சிலநாள்சென் றெடுத்துப்பாரு
பாலகனே பற்பமது பூர்க்குங்காலம்
தண்ணமுடன் பற்பமதை யெடுத்துமைந்தா
தகைமையுள்ள சரக்குகளில் கவசஞ்செய்து
உண்மையுடன் கனயெருவில் புடமேபோட்டால்
வுத்தமனே சரக்கனைத்துங் கட்டும்பாரு
நண்மையுடன் சத்துரு மித்துருக்களெல்லாம்
நளினமுடன் வழலைக்கு வணங்கும்பாரே.
விளக்கவுரை :
93. பார்க்கயிலே யின்னமொரு கருமானங்கேள்
பாடுகிறேன் நாதாக்கள் ரிடிகள் வேதை
தீர்க்கமுடன் கருவதனா லெடுக்குமுப்பு
திறமான வேதையிது சுளுக்குவேதை
ஆர்க்கமுடன் பரிபாஷை முப்புமார்க்கம்
அப்பனே அனேகவழிக்கோடிபாதை
பார்க்கவே பாடிவைத்தார் சித்தர்தாமும்
பண்பாக நாம்சொன்ன படிகாணோமே.
விளக்கவுரை :
94. காணோமே சரக்குக்குச் சத்துருகாலன்
கடிதான நரைதிரையும் மாற்றுங்காலன்
தோணவே முப்பூவிற் குன்றுவீதம்
துறையோடும் முறையோடும் கொண்டாயானால்
பூணவே தேகமது கற்றூணாகும்
பொங்கமுடன் வயததுவும் லக்கோயில்லை
வேணபடி யுபசார மிகநடக்கும்
வேதமுடன் காயசித்திக் கிடங்கொள்வாயே.
விளக்கவுரை :
95. இடங்கொள்வாய்ப் புலஸ்தியனே மச்சகேந்திரா
யெழிலான முப்பூவா லெல்லாஞ்சித்தி
திடங்கொண்ட காயமதை நிறுத்தலாகும்
திரளான மனுக்களெல்லா முனக்கீடுண்டோ
தடங்கொண்ட சமாதியிலே யிருந்துகொண்டு
தாரணியில் வெகுகோடி காலமப்பா
மடங்கண்டு தேகமதை நிறுத்திக்கொண்டு
மானிலத்தில் சித்தனைப்போல் வாழுவாயே.
விளக்கவுரை :
அகத்தியர் பன்னிருகாண்டம் 91 - 95 of 12000 பாடல்கள்
அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar