அகத்தியர் பன்னிருகாண்டம் 216 - 220 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 216 - 220 of 12000 பாடல்கள்


216. தந்தாளே யின்னமொரு மார்க்கம்பாரு
    தாடாண்மை யாகவல்லோ காத்துறேன்கேள்
சிந்தனையாய் அகஸ்தியரும் புலஸ்தியருக்கு
    திறமுடனே தானிருந்த ஸ்தானபாரம்
சொந்தமுடன் தானுரைக்கும் வளமையாவும்
    சுந்தரருந் தான்கேட்டு மகிட்சிகொண்டு
தொந்தமுடன் நாதாக்கள் கூட்டத்தோடு
    துரையான அகஸ்தியரும் மலைசொன்னாரே.
    
விளக்கவுரை :


217. சொன்னாரே அகஸ்தியரும் மலைதானப்பா
    தோற்றமுடன் அதிசயங்கள் மெத்தவுண்டு
நன்னயமாய் அகஸ்தியனார் மலையோரத்தில்
    நடுவான மத்தியத்தில் சுனையொன் றுண்டு
மன்னவர்கள் தேவாதி ரிடிகள்தாமும்
    வருகுவதும் போகுவதும் மெத்தவுண்டு
பன்னயமாய் வுதகமொன்ற தங்கேயுண்டு
    பாரினிலே வெகுகோடி சித்தருண்டே.

விளக்கவுரை
 218. உண்டான வாயக்கால் மண்டபத்தில்
    உத்தமனே வெகுகோடி சித்தரப்பா
அண்டாத சேனையுடன் ரிடிக்கூட்டங்கள்
    அப்பனே தான்வருவார் மெத்தவுண்டு
திண்டான அசுவனியாந் தேவர்தன்னால்
    தீரமுடன் அகஸ்தியனார் சமாதியுண்டு
கண்டாரே புலஸ்தியரும் சமாதிகண்டு
    களிப்புடனே சிலகால மிருந்தார்காணே.

விளக்கவுரை :


219. இருந்தாரே சிலகாலம் புலஸ்தியருமப்பா
    யெழிலான சமாதியது பக்கல்தன்னில்
பொருந்தமுடன் சிவபூசை நமஸ்காரங்கள்
    புகழாக செய்துமல்லோ இருக்குங்காலம்
வருந்தியே சித்தரிடம் வருவாரப்பா
    வளம்பெரிய வாயக்கால் மண்டபத்தில்
குருந்தமென்னு மரமதிலே அகஸ்தியர்தாமும்
    கூட்டமுடன் எந்நேர மிருப்பார்தாமே.

விளக்கவுரை :


220. தாமான சித்தருடக் கூட்டத்தோடும்
    சாங்கமுடன் அகஸ்தியரு மிருப்பார்கண்டீர்
நாமான குகைக்குள்ளே முனிவர்தாமும்
    நாட்டமுடன் சிவயோகஞ் செய்யும்போது
பாமான ரிடிக்கூட்டம் முனிவர்தாமும்
    பக்கலிலே வந்து அஞ்சலிகள் செய்வார்
வேகமான வேதரிடிபோதரிடிதானும்
    வெகுக்கூட்ட மாகவேதான் இருந்தார்தானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar