அகத்தியர் பன்னிருகாண்டம் 206 - 210 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 206 - 210 of 12000 பாடல்கள்


206. கூறுவேன் தாம்பரமாந் தகடுதானுங்
    குறிப்பாகத் தானெடுத்துக் கொண்டுவந்து
சீறுடைய தாம்பரமுஞ் சேர்தான்பத்து
    சிறப்புடனே தகடதனை நெருப்பில்காச்சி
மாறுபடாத் தகடதனில் சூதந்தன்னை
    மயங்காமல் களஞ்சிதனை விட்டுப்பாரு
சேறுபோல் சூதமது வோடிப்பாயும்
    செம்மையுள்ள செம்பொன்னு சொல்லொண்ணாதே.

விளக்கவுரை :


207. ஒண்ணாது இவ்வேதை தாம்பிரவேதை
    ஓகோகோ நாதாக்கள் செய்யும்வேதை
அண்ணலார் ராஜாதி ராஜர்தாமும்
    ஆகாகா இவ்வேதை செய்வாரேபார்
நண்ணமுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
    நவின்றிட்டேன் புலஸ்தியனே உந்தனுக்காய்
வண்ணமுடன் யோதிவித்து வேதையாகும்
    மகத்தான வேதையிது தாம்பிரமாமே.

விளக்கவுரை :


208. தாம்பிரமாம் வேதையிது சொன்னேன்பாரு
    சுத்தமுடன் நாதாக்கள் செய்யும்வேதை
தாம்பரமாம் நவலோகந் தன்னிலீய
    தகைமையுள்ள லோகமெல்லாம் ஏமமாகும்
வேம்புடனே தயிலமது எடுத்துமைந்தா
    விருப்பமுடன் முப்பூவைக் கூடச்சேர்த்து
பாம்புடனே சூதமதைத் தாக்கினாக்கல்
    பார்த்திபனே சூறலது அற்றுப்போமே.

விளக்கவுரை :


209. அற்றதொரு நாகத்தை எடுத்துக்கொண்டு
    அப்பனே தங்கமது பத்துக்கொன்று
உற்றதொரு கெந்தியது நாலத்தொன்று
    வுகமையுடன் தான்சேர்த்து மைந்தாகேளு
கற்றபடி பொற்றலையின் சாற்றினாலே
    கருத்துடனே தானரைப்பாய் நாலுசாமம்
வெற்றிபெற பில்லையது லகுவாய்ச்செய்து
    வெயில்தனியே காயவைத்து செப்பக்கேளே.

விளக்கவுரை :


210. கேளப்பா ஓட்டிலிட்டுச் சீலைசெய்து
    கெவனமுடன் பத்தெருவிற் புடத்தைபோடு
நாளப்பா போகாமல் மற்றனாள்தான்
    நலமுடனே தானெடுத்துப் பிரித்துப்பார்த்து
மீளப்பா பீங்கானில் பதனம்பண்ணு
    மேன்மையுள்ள செந்தூரம் பூக்கும்பாரு
வீளப்பா செந்தூரந் தனையெடுத்து
    விருப்பமுடன் வெண்ணைதனில் கொண்டிடாயே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar