அகத்தியர் பன்னிருகாண்டம் 386 - 390 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 386 - 390 of 12000 பாடல்கள்


386. கோடியாம் பூதங்கள் சூழும்நாடு
    கொற்றவனே வாசமுனி யிருக்கும்நாடு
நீடியே வண்ட ரறியாதநாடு
    நித்திலங்குஞ் சித்தொளிவு யிருக்கும்நாடு
தேடியே சித்தர்முனி ரிடிகள்தாமும்
    திறமுடனே கண்டறிந்த நாடுவாகும்
ஆடியே புலஸ்தியனே யப்பாகேளு
    ஆதி கைலாச நாடென்னலாமே.

விளக்கவுரை :


387. என்னலாம் புலஸ்தியனே யின்னங்கேளு
    எழிலான சித்தர்முனி யிருக்கும்ஸ்தானம்
பன்னவே டில்லிக்கு தெற்கேயப்பா
    பாங்கான சோழவள நாடொன்றுண்டு
முன்னேதான் பெரியோர்கள் சொன்னாப்போல
    மூதுலகோ ரறியாத ஸ்தலமொன்றுண்டு
பொன்னேகேள் மன்னவனே ராஜயோகா
    பொங்கமுடன் சித்தர்களுக் குகந்தநாடே.

விளக்கவுரை :


388. நாடான சோழவள நாடப்பாகேள்
    நலமான நடுமையந் தன்னிலப்பா
கூடான குன்றதுபோல் மலையொன்றுண்டு
    குறிப்பான யேழு யோசனைதானுண்டு
பாடான மலைக்குள்ளே சுனையொன்றுண்டு
    பாங்கான வாயிரம் படிதானுண்டு
தாடாண்மை யுள்ளதொரு செனகரப்பா
    தண்மையுடன் சுரங்கமதி லிருப்பார்தாமே.

விளக்கவுரை :


389. இருப்பாரே வெகுகோடி சித்தரப்பா
    எழிலான சுரங்கத்தின் படியின்மேலே
பொருப்பான ஒவ்வொரு சித்துதாமும்
    பொங்கமுடன் படிதோறுந் தவசிருப்பார்
விருப்பகலுங் கோட்டையது யெழுநூறுகாதம்
    வீருள்ள சூரியனைக் கண்டதில்லை
துருப்பான பொறுப்பளவு திரவியங்கள்
    துப்புரவாய்க் கொட்டிருக்கக் காணலாமே.

விளக்கவுரை :


390. காணலாம் வெகுகோடி செம்பொன்னப்பா
    கருத்துடனே சித்தர்முனி ரிடிகள்தாமும்
தோணவே தேடிவைத்த திரவியங்கள்
    தொல்லுலகை விலைமதிக்குங் கோடாகோடி
நாணவே நவரத்தின கசிதமெல்லாம்
    நாதாக்கள் தேடிவைத்த நெடுங்காலவைப்பு
பூணவே பொன்னி னாபரணமெல்லாம்
    புகழாகக் குவிந்திருக்கப் பார்க்கலாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar