அகத்தியர் பன்னிருகாண்டம் 316 - 320 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 316 - 320 of 12000 பாடல்கள்


316. ஒன்றுடனே வியாசமுனி சொன்னநூலாம்
    உத்தமனே வாயிரத்துச் சொச்சநூலாம்
வென்றிடவே சொச்ச சூத்திரந்தான்நூறு
    வேதமுனி தானுரைத்த வாக்கியம்பார்
தென்றிசையில் தட்சணா மூர்த்தினாயன்
    தேசத்தில் மாந்தர்கள் பிழைக்கவென்று
முன்னுரைத்த பெருநூலாங் காவியந்தான்
    உத்தமனே ஆயிரத்து சொச்சம்பாரே.

விளக்கவுரை :


317. சொச்சமாய் சுருக்கமது நூறும்பாரு
    சோராமல் சூத்திரமாய் பத்தும்பாரு
மிச்சமாம் கைலாச சட்டநாதர்
    மீண்டுரைத்த நிகண்டுக்குச் சுருக்கமப்பா
அச்சுமில்லா எண்பதுவும் பதினாறும்பார்
    அப்பனே சிவவாக்கியர் குளிகைபாரு
கச்சலன்றி கருவூரார் சொன்னநீதி
    காசினியி லாராலும் பார்க்கொண்ணாதே.

விளக்கவுரை :


318. ஒண்ணாது மச்சமுனி யெண்ணூறுக்கு
    வுத்தமனே பதினாறு சுருக்கம்பாரு
எண்ணாது போகருக்கு சுருக்கம்பாரு
    யெழிலாகப் பாடிவைத்தேன் நூறதாகும்
நண்ணான வேதமுனி நூலுக்கப்பா
    நலமான ரெண் நூலும் பார்க்கவேண்டும்
விண்ணவே காவியம் பன்னீராயிரத்தில்
    விருப்பமுடன் பாடிவைத்த சூத்திரம் நூறுபாரே.

விளக்கவுரை :


319. சூத்திரமாம் வேதரிடி சொன்னநூலில்
    சுருதியுட குருக்கிடையுந் தன்னைப்பாரு
நேந்தியுடன் சிவானந்தர் சொன்னநூலில்
    நேர்மையுடன் தீட்சாவிதி முன்பின்பாரு
பூர்த்தியாய் காவியமா யிரந்தான்பாரு
    புகழான சூத்திரமும் பத்தும்பாரு
சாத்திரங்கள் தப்பாமல் விதியணியாய்ப்பாரு
    சட்டமுடன் பார்த்தவர்கள் சித்தராமே. 

விளக்கவுரை :


320. சித்தராஞ் சிவஜால மாயிரத்தில்
    தேர்ந்தெடுத்த சூத்திரமும் நூறும்பாரு
வித்தகனாய்ப் பிறந்தாலும் லாபமென்ன
    விதியறியான் முறையறியான் வீணாள்போக்கன்
சுத்தமுடன் சுப்பிரமணியர் சொன்னநீதி
    சூட்சமடா வாதாரக் கருவிபத்து
நித்தமுடன் பார்த்துமல்லோ வழியறிந்து
    நியமத்தில் நிற்பவனே முத்தனாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar