அகத்தியர் பன்னிருகாண்டம் 396 - 400 of 12000 பாடல்கள்
396. தாமான கற்பமது கொண்டபோது
தாரணியில் கோடிவரை யிருக்கலாகும்
போமேதான் காயாதிக் கொண்டவர்க்கு
பொங்கமுட னரைதிரையு மற்றுப்போகும்
நாமேதான் சித்தருட வைப்புதன்னை
நாதாந்த முனிகளுமே செய்மாட்டார்
வேமேதான் கோட்டைக்குள் அதிசயங்கள்
விதவிதமாய் இருப்பதுவுங் காணலாமே.
விளக்கவுரை :
397. காணலாம் அயோத்திக்குக் கீழ்பாகத்தில்
கடிதான நதியொன்று கானாறுண்டு
பூணவே கானாறு நடுமையத்தில்
பொங்கமுடன் ஆயக்கால் மண்டபந்தான்
வாணமுடன் அளர்பூமி தன்னைச்சுற்றி
வாகுடனே கதிர்போல சூழ்ந்திருக்கும்
நீணமுடன் நூறு யோசனையுந்தானும்
நிலையான உவர்ப்பூவு சவுக்காரமாமே.
விளக்கவுரை :
398. காரமாஞ் சீனபதிக் கொப்பதாகும்
கருவான சித்தர்முனி ஸ்தலமென்பார்கள்
தூரமுடன் கோட்டையது காணார்தானும்
துப்புரவாய்க் கண்ணிற்குத் தோன்றாதாகும்
வீரமுடன் நவதாது பாஷாணங்கள்
விளைகின்ற சத்துள்ள பிரிதிபாகம்
தீரமுடன் சித்தர்முனி நாதர்தாமும்
சிறப்புடனே வீற்றிருக்கும் பூமிபாரே.
விளக்கவுரை :
399. பாரேதான் நர்மதா கிழக்கேயப்பா
பாங்கான ராமகிரி தேசமுண்டு
ஊரேதான் ஒருநூற்றுக் காதமப்பா
உத்தமனே நர்மதா கிழக்குபாகம்
சீரேதான் நடுநாடு மத்திபத்தில்
சிறப்புடனே திட்டான மேடையுண்டு
நேரான மேடையில் நடுபாகத்தில்
நெருக்கமுள்ள குன்றொன்று யிருக்குந்தானே.
விளக்கவுரை :
400. தானேதான் சமைந்திருக்கு மண்டபத்தில்
சதகோடி சூரியர்போல் சித்தருண்டு
வானவர்கள் முதலான தேவர்தாமும்
வந்திறங்கும் பொய்கையது சுனையொன்றுண்டு
தேனான சித்தர்முனி ரிடிகள்தாமும்
தேர்வேந்தர் ராஜாதி மண்டபத்தில்
மானான மதிலோரஞ் சுற்றோரத்தில்
மார்க்கமுடன் தவசுமிகச் செய்வார்காணே.
விளக்கவுரை :
அகத்தியர் பன்னிருகாண்டம் 396 - 400 of 12000 பாடல்கள்
அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar