அகத்தியர் பன்னிருகாண்டம் 116 - 120 of 12000 பாடல்கள்
116. மிதந்திட்ட சாத்திரத்தை முனிவர்தாமும்
மேன்மையுடன் கண்டெடுத்து குகைக்குள்வைத்து
பதமுடனே நமஸ்காரம் பூசைசெய்தே
பட்சமுடன் னூலதனை மிகவாராய்ந்து
மதமுடனே நூற்கருவின் உருவைக்காணார்
மார்க்கமுடன் நூலதனை கவனியாமல்
சதமுடைய சாஸ்திரத்தைப் பொய்யென்றெண்ணி
சட்டமுடன் வரரிடியைத் தூற்றினாரே.
விளக்கவுரை :
117. தூறினால் நாதாந்த சித்தொளியைக்கண்டு
துப்புறவாய்ச் சாத்திரத்தைப் பொய்யென்றெண்ணி
கூறினதோர் படியாலே யுந்தமக்கு
குவலயத்தில் தலைதெரித்துப் போகுமென்று
தூர்வாச முனிபோலே சாபஞ்சொல்லி
துன்மையுடன் சமாதியிலே போகமென்று
மாறுபா டாகவல்லோ வதிதங்கூறி
மானிலத்தில் வெகுசாப மிட்டார்தாமே.
விளக்கவுரை :
118. இட்டதோர் சாபத்தால் புலஸ்தியாகேள்
யெழிலான சித்தொளியும் மண்ணாய்ப்போனார்
கெட்டலைந்து வெகுபேர்கள் தோஷஞ்சொல்ல
கீர்த்தியுடன் மண்டலத்தில் மாண்டார்தாமும்
விட்டகுறை தானிருந்து வீம்புபேசி
வெகுபாடு பட்டார்கள் மாந்தர்தாமும்
தொட்டமுறை குணமறிந்து செய்தால்சுத்தி
தேற்றமுடன் செய்யாதார் காணார்பாரே.
விளக்கவுரை :
119. காணாத சாபத்தை அறியாமற்றான்
கண்கெட்டான் போலிருந்து நூல்கள்தம்மை
வீணாக தோஷங்கள் மிகவுஞ்சொல்லி
விருதாகச் சாபத்துக் காளுமானார்
வேணாத பொருட்கெல்லாம் மிகவும்பாரு
மேன்மையுடன் பட்டுமல்லோக் கெட்டுமாண்டார்
தோணாத சரக்கெல்லா மதிலேதோயும்
தொந்தமிட னறியாமற் கெட்டர்பாரே.
விளக்கவுரை :
120. கெட்டுமே வரரிடிமேல் தோஷஞ்சொல்லி
கெடுதியுள்ள பாவத்துக் காளுமாகி
பட்டுமே சாபத்தால் முறிந்துஆளாய்
பாருலகில் தீவினைக்கே யாளுமாகி
நட்டாற்றில் விட்டதொரு கதையைப்போல
நாதாக்கள் நூலதனைப் பாராமற்றான்
சட்டமுடன் பழிபாவந் தலைமேற்கொண்டு
சாங்கமுடன் தலைதெரித்துப் போனார்தாமே.
விளக்கவுரை :
அகத்தியர் பன்னிருகாண்டம் 116 - 120 of 12000 பாடல்கள்
அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar