அகத்தியர் பன்னிருகாண்டம் 46 - 50 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 46 - 50 of 12000 பாடல்கள்


46. தானான புலஸ்தியனே சொல்லக்கேளும்
    தகைமையுள்ள ஆயுரு வேதந்தன்னை
பானான வடமொழியைப் பிரித்துப்பார்த்து
    பன்னிரெண்டு காண்டமதாய்ப் பாடிவைத்தேன்
தேனர்ன பன்னீராயிரந்தான் அப்பா
    தெளிவான காவியமு மிதுதானாகும்
கோனான ரிஷிமுனிவர் சித்தர்தாமும்
    கோரிக்கை கேட்டதினா லருளினேனே.

விளக்கவுரை :


47. அருளினேன் புலஸ்தியனே யிந்தநூலும்
    ஆருக்குங் கிட்டாது உனக்குக்கிட்டும்
பொருளறிந்த புண்ணியர்கள் விடுவாரோசொல்
    புத்தியுள்ள தவயோகி விடமாட்டான்பார்
இருளகற்றி ஞானியர்க ளிந்தநூலை
    யெழிலுடனே சதாகாலம் பூசிப்பார்கள்
தெருள்கலைக ளிதிலதிகம் உண்டாம்பாரீர்
தென்னவனே புலஸ்தியனே விரும்புவாரே.
        
விளக்கவுரை :


48. விரும்புவா ரிதன்பெருமை சொல்வேன்பாரு
    வீரமுடன்..................பல................சித்தர்தாமும்
கரும்பான நூலனைத்தும் பாடிவிட்டு
    கருவான பொருளையெல்லாம் மறைந்துப்போட்டார்
சுரும்புலவும் புகுந்துடையா.....................னங்கேளு
    சுருதிபொரு ளாராய்ந்து பார்ப்பதற்கு
அரும்பொருளை...............மவருக்கும் வுபயமாக
    அன்புடனே பாடிவிட்டார் வீணாய்தானே.

விளக்கவுரை :


49. வீணாகப் பாடிவிட்டு வியர்ப்பஞ்சொல்லி
    வேதாந்த நுட்பமதைக் காட்டாமற்றான்
தோணத சரக்கெல்லாம் வீணாகக் சொல்லி
    தொல்லுலகில் சுட்டலையப் பாடுதேடி
கோணாமல் முகம்வாழ இருக்காமற்றான்
    கொற்றவனே வுட்பொருளை சொல்லவில்லை
சாணான....................கைக்கண்ட தொருவாதம்போல்
    சட்டமுட னொன்றையுந்தான் காட்டார்பாரே.

விளக்கவுரை :


50. காட்டவில்லை கருவெல்லா மறைத்துப்போட்டார்
    காசினியில் சித்துமய மாகுமென்று
நீட்டமுடன் மறைத்தப் பொருளையெல்லாம்
    நிட்சயமா யென்னூலில் சொல்லிவிட்டேன்
வாட்டமுடன் பாடிவைத்த யிதிகாசத்தை
    வண்மைபெற லோகமெல்லாம் அறிவதற்கு
நாட்டமுடன் தழைத்தபெரும் ஆயுள்வேதம்
    நவின்றிட்டேன் வுலகத்தோர் பிழைக்கத்தானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar