அகத்தியர் பன்னிருகாண்டம் 176 - 180 of 12000 பாடல்கள்
176. காணவே புலஸ்தியா யின்னங்கேளு
காசினியில் பண்டிதற்கு நேரானகூர்மை
தோணவே விட்டகுறை யிருக்குமானால்
தோன்றுமே யவருக்கு யிந்தபூமி
வீணான வீணனுக்கு வாய்க்குமோசொல்
விட்டகுறை யிருந்தாலே வாய்க்கும்பாரு
பூணவே பிடகனுக்கு வாய்க்காதப்பா
பொலிவான புண்ணியர்க்கு வாய்க்கும்பாரே.
விளக்கவுரை :
177. வாய்க்கவே பூனீறு யெடுக்குங்காலம்
வளமையுடன் மாதமது சொல்லக்கேளும்
மேய்க்கவே பங்குனியாம் பருவமாகும்
மேன்மையுள்ள ...............எல்லாம் பருவந்தன்னில்
தாய்க்கமலம் வீற்றிருக்கும் மனோன்மணியாள்தாமும்
சற்பனையா ய்வந்துறையும் பூநீறப்பா
காய்க்கவே பூநீறு................வளறுமார்க்கம்
காணவே தெரிவித்தார் சித்தர்தாமே.
விளக்கவுரை :
178. தாமான பூநீறு யெடுக்குங்காலஞ்
சாற்றுகிறேன் நடுச்சாம வேளைதன்னில்
நாமான நமதையர் அசுவனிதேவர்
நாதரவர் தானுரைத்த முறைபோல்தாமும்
போமேதான் முறைதனையே புகல்வேன்கேளு
புலஸ்தியனே யொருவருக்கும் புகலவேண்டாம்
வேமேதான் பள்ளமது ஆள் ...................டு
விருப்பமுடன் றானெடுக்க விபரங்கேளே.
விளக்கவுரை :
179. கேளேதான் பள்ளமது மிகவாய்ச்செய்து
கெவனமுடன் மண்தனை சலித்துக்கொண்டு
நாளேதான் சுனையருகின் தன்னிற்சென்று
நளினமுடன் ஜலமதனைக் கொண்டுவந்து
பாளேதான் போகாமல் மண்ணைத்தானும்
பக்குவமாய்ப் பிசறியல்லோப் பள்ளந்தன்னில்
தாளேதான் கெட்டணைகள் மிகவுஞ்செய்து
தண்மையுடன் வரவுகோல் மேலேதூவே.
விளக்கவுரை :
180. தூவியே மூன்றுநாள் பொறுத்தபின்பு
தூரமதாய்த் தானிருந்து பார்க்கும்போது
ஆவிபோல் புகையெழும்பிச் சுடருண்டாகும்
அப்பனே கண்கொள்ளா வேகம்பாரு
காவியத்தில் சொன்னபடி கணக்கதாக
கருவாகப் பூசைநை வேத்தியங்கள்
மேவியே பராபரியைப் பூசித்தேதான்
மேன்மையுடன் முப்பூவி னருகிற்செல்லே.
விளக்கவுரை :
அகத்தியர் பன்னிருகாண்டம் 176 - 180 of 12000 பாடல்கள்
அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar