அகத்தியர் பன்னிருகாண்டம் 141 - 145 of 12000 பாடல்கள்
141. கூறுவான் நீதானே நற்சீஷனப்பா
குவலயத்தி லுன்னைவிட சீஷனுண்டோ
மாறுடைய மாண்பர்களுக் கன்னமிட்டால்
வன்கொடுமை மிகச்செய்வா னென்னல்போலும்
ஆறுகுளம் நதிமுதலும் தீர்த்தமாடி
அப்பனே சமாதிதனி லிருந்துகொண்டு
கூறுமுனி யகஸ்தியன்போல் வுருவம்கொண்டு
குவலயத்தில் ஞானிகள்போ லிருப்பான்தானே.
விளக்கவுரை :
142. தானான புலஸ்தியனே சொல்லக்கேளும்
சாற்றுகிறேன் மாணாக்கள் பிழைக்குந்தன்மை
கோனான யென்தேவர் தலைவணங்கி
கொற்றவனே கூறுகிறேன் வேடமார்க்கம்
பானான பாருலகில் சிலதுமாண்பர்
பகல்வேடம் போட்டதொரு கதையுங்கண்டேன்
தேனான மெய்யான சித்துசெய்கைத்
திறமுடனே யானுரைப்பேன் திண்ணம்பாரே.
விளக்கவுரை :
143. திண்ணமாம் மெய்ஞானி மார்க்கம்சொல்வேன்
திறமுடனே நாதாக்கள் தம்மைப்போல
வண்ணமுடன் சகலநூல் எல்லாங்கற்று
வளமுடனே மாயா சம்பந்தம்நீக்கி
எண்ணமுடன் தொல்லை சாகரத்தைவிட்டு
எழிலான சின்மயத்தின் சோதிகண்டு
நண்ணமுடன் ஞான சாகரத்தினேர்மை
நாட்டமுடன் தானறிந்து நவில்வார்தாமே.
விளக்கவுரை :
144. நவிலவே வெகுநூல்கள் பார்த்துமேதான்
நலமான தத்துவத்தின் நேர்மைபூண்டு
குவியவே ஞான சாகரத்தைக்கண்டு
குவலயத்தில் பாசமென்ற கயிறைநீக்கி
தவிலமுடன் பெரியோர்கள் ரிடிகள்தேவர்
தகைமையுடன் கண்டறிந்து கேள்விகேட்டு
புவிலமுன் காயாதி கற்பமுண்டு
பூதலத்தி லென்னாளு மிருந்தார்தாமே.
விளக்கவுரை :
145. இருந்தாரே கோடியுகம் சமாதியில்தானும்
யெழிலாக சரிதைகிரி யோகமெல்லாம்
திருந்தமுடன் கற்றுணர்ந்து சிவயோகிபோலும்
திறமான ஞானமுள்ளான் தீரன்போலும்
பொருந்தவே அட்சரமா ஞானிபோலும்
பொங்கமுடன் தத்துவக் கியானிபோலும்
அருந்தவத்தி லுற்றவித்து வண்ணலார்போல்
அவனியிலே பேருண்டா யிருப்பார்காணே.
விளக்கவுரை :
அகத்தியர் பன்னிருகாண்டம் 141 - 145 of 12000 பாடல்கள்
அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar