அகத்தியர் பன்னிருகாண்டம் 171 - 175 of 12000 பாடல்கள்
171. கேளே நீ புலஸ்தியனே கெணிதவானே
கெவனமுடன் பூநீறு எடுக்கவேதான்
தாளான பூமிவளந் தன்னைக்காண
தாரணியில்................தலத்தைக்காண
பாளான பூமியது அளதுபூமி
பாங்கான பூமியினி லுண்டாமல்லோ
நாளான மல்லிக்கார்ச் சுனையின்பக்கல்
நாத...............ருக்குந் தலங்கண்டாரே
விளக்கவுரை :
172. கண்டாரே சுனையோர மளர்பூமிதன்னை
காவணத்....... ....... ........ ........ ....................
கொண்டாரே சமாதியிடம் வெகுகாலம்
....... ....... ........ .......... ......... ......................
....... ........ ..... ..... ....... ........ .......................
...... .... ....வெகுகால மிருப்பாரங்கே
வண்டுடனே கூட்டமதுக் கதண்டுக்கூட்டம்
வகுப்பான யானைபோல் கதண்டுதானே.
விளக்கவுரை :
173. தானான கதண்டுகளு மெத்தவுண்டு
தாக்கான புலிகரடி சிங்கம்யாளி
கோனான மிருகவகைக் கூட்டமெல்லாம்
குன்றருகே சுனையோரம் மெத்தவுண்டு
தேனான கதண்டுகளும் தேனையுண்டு
தெளிமையுடன் வனாந்தரத்தை சுற்றிருக்கும்
பானான மனோன்மணித்தாய்ப் பூர்க்குங்காலம்
பாங்கான இடம்பதவி நல்லிடமுமாமே.
விளக்கவுரை :
174. நல்லான இடமதுவும் வஞ்சிநாடு
நலமான பூனீறு விளையும்நாடு
தல்லான பூனீறு விளையுமார்க்கம்
கானகத்தில் ஆளுயர மாகப்பூர்க்கும்
புல்லான பூவெடுக்க நாள்தான் சொல்வோம்
புத்தியுள்ள புலஸ்தியனே சொல்லக்கேளும்
சொல்லாதே யொருவருக்கு மிந்ததேசம்
சொன்னாலே தலைதறித்துப் போகும்பாரே.
விளக்கவுரை :
175. பாரேதான் பாவமது மெய்தும்பாரு
பாங்கான பூநீறு கோட்டைதன்னை
நேரான தலைவாசல் காட்டவேண்டாம்
நேர்மையுடன் கண்டாலே மோசமோசம்
தூரான பழிபாவந் தலைமேற்கொள்ளும்
துன்பமென்ற சாகரத்தில் அழிந்துபோவாய்
சீரான இருப்பிடத்தைச் சொல்லவேண்டாம்
சொல்லாமல் மவுனமதா யிருப்பீர்காணே.
விளக்கவுரை :
அகத்தியர் பன்னிருகாண்டம் 171 - 175 of 12000 பாடல்கள்
அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar