அகத்தியர் பன்னிருகாண்டம் 241 - 245 of 12000 பாடல்கள்
241. விழலானார் பரிபாஷை பார்த்துமல்லோ
விருதாவாய்த் தெரியாமல் மாண்டார்கோடி
வழலைமுகம் தானறியார் மாணாக்காளே
வகண்டபரி பூரணத்தை மெய்யென்றெண்ணி
கழலவே யென்னூலில் ரோமபாஷை
பரிவாகச் சொல்லிவிட்டேன் வைநூறுக்குள்
சுழலவே கண்டறிந்து காண்பானாகில்
சுத்தமுள்ள சித்தனென்னும் பேருமாச்சே.
விளக்கவுரை :
242. ஆச்சப்பா ரோமரிடி பரிபாஷையப்பா
வாச்சரிய லோகமதி லாருங்காணார்
பேச்சப்பா பேசுதற்கு இடமுமில்லை
பேரான கைமறைப்பு யாதொன்றில்லை
வாச்சப்பா வழலையிட மார்க்கந்தன்னை
வாகுடனே பாடிவைத்தேன் ரெண்டாங்காண்டம்
ஓச்சப்பா யாருந்தான் சொல்லக்கூடா
யெழிலான தென்வாக்கு வுறுதியாமே.
விளக்கவுரை :
243. உறுதியா மிந்தபரி பாஷைதானும்
வுத்தமனே சிவயோகி அறிவானப்பா
நிறுதிமொழி வார்த்தையினால் நிட்சயித்து
நீடுழி காலம்வரை யென்னூல்பார்த்து
குறுதியுள்ள சூத்திரமும் பதினாறுபார்த்துக்
குறிப்புடனே சோடசமு மிரண்டும்பார்த்து
அறுதியுடன் பரிபாஷை யறிந்துமேதான்
அப்பனே முப்பூவை முடிப்பாய்தானே.
விளக்கவுரை :
244. முடிப்பதற்கு நாளுமது யெட்டில்பாரு
முனையான கதிரோனும் சரியாய்நிற்பான்
துடிப்புடனே காவனத்திற் செல்லும்போது
துறைபோல முறைபோல நீயுஞ்சென்று
குடிப்பழுது நேராமல் ரேசகத்தைப் பார்த்து
குறிப்புடனே வேளையது யென்னூல்பார்த்து
அடிப்பறையில் பிரதிவியில் மண்ணைத்தோண்டி
அப்பனே ரவிதனிலே காயப்போடே.
விளக்கவுரை :
245. போடையிலே மண்ணுமது கசுவுவாங்கி
பொங்கமுடன் காற்றாறி யிருக்கும்போது
நீடமுடன் சல்லாவை மேலேபோட்டு
நிஷ்களமாய் பணியதுவும் மேற்படாமல்
மூடவே மூன்று நாள்சென்றபின்பு
முறைபோலென் பரிபாடை கையிலேந்தி
கூடயிலே கேணிநீர் கொண்டுவந்து
குமுறவே சலமதனால் பிசைந்திடாயே.
விளக்கவுரை :
அகத்தியர் பன்னிருகாண்டம் 241 - 245 of 12000 பாடல்கள்
அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar