அகத்தியர் பன்னிருகாண்டம் 431 - 435 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 431 - 435 of 12000 பாடல்கள்


431. என்னலாம் புலஸ்தியனே யின்னங்கேளு
    எழிலான வதிசயங்கள் கூறுவேன்பார்
பன்னவே வியாசமுனி சமாதிபக்கல்
    பாங்கான சித்தர்முனி வாயிரம்பேர்
சொன்னபடி ரிடியாரைச் சுத்தியல்லோ
    சுத்தமுடன் சமாதிதனைப் பாதுகாத்து
நன்னயமாய் வுலாகொடுத்து நிற்பார்தாமும்
    நலமான ரிடிக்கூட்ட மெத்தவாமே.

விளக்கவுரை :


432. மெத்தவே சித்துமுனி ரிடிகள்கூட்டம்
    மேதினியி லங்குண்டு சொல்லொண்ணாது
சத்தமா ரிடிகளெல்லாந் தவசிருப்பார்
    சதகோடி சூரியர்போல் தோற்றும்பாரு
நித்தமூடன் வேதமுனி வியாசர்தாமும்
    நேரான காவியங்க ளோதுவார்பார்
சுத்தமுடன் ஞானோப தேச நூலை
          சுருதிபொருள் கருவியுடன் சொல்லுவாரே.

விளக்கவுரை :


433. சொல்லவே வேதமுனி வியாசர்தாமும்
    தொல்லுலகில் பாசமற்று வினையகற்றி
எல்லோருந் தீவினையை யகற்றியல்லோ
    ஏகாந்தக் காவியத்தைக் கேட்டுமேதான்
நல்லவழி நற்பொருளை வுணர்ந்தாராய்ந்து
    நலமான மெய்ப்பொருளைக் காணவென்று
புல்லவே யெண்ணாயிரங் காவியந்தான்
    புகழாகப் பாடிவைத்தா ருண்மையாமே. 

விளக்கவுரை :


434. உண்மையாம் ஞான காவியமதாக
    உத்தமனே யெண்ணாயிரங் காவியந்தான்
வண்மையாய் வுலகத்தின் நீதியெல்லாம்
    வளப்பமுடன் கண்டல்லோ மிகவாராய்ந்து
திண்மையாம் யிருளதனைக் கதிரோன்தானும்
    தீர்க்கமுடன் நீக்குகின்ற தன்மைபோல
கண்மையுடன் யிருளகத்தி வேதநூலைக்
    காசினியில் தாமுரைத்தார் பெருமைபாரே.

விளக்கவுரை :


435. பெருமையாம் யெண்ணாயிரக் காவியந்தான்
    பேரான வியாசர்முனி பாடியல்லோ
அருமையாய்ப் பாடிவைத்த நூல்கள்தம்மை
    அப்பனே குகைதனிலே பதனம்பண்ணி
பெருமையாய் நூலதனைச் சாபமிட்டு
    பொங்கமுடன் தன்குகைக்குள் வைத்திருக்க
வெருமையாய்ச் சித்துமுனி ரிடிகள்தாமும்
    மேதினியில் நூல்கேட்க வருந்திட்டாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar