அகத்தியர் பன்னிருகாண்டம் 56 - 60 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 56 - 60 of 12000 பாடல்கள்



56. ஆச்சப்பா வெவ்வேறு கோணந்தன்னில்
    அஷ்டமா சித்திதன்னை யாடலாகும்
மூச்சப்பா தனையடக்கி சமாதிநின்றால்
    முனையான வாசிவழி தெறிக்கும்பாரு
பேச்சப்பா யில்லையது பிணம்போல்நிற்பார்
    பேருலகில் மவுனமென்ற சித்தனென்பார்
ஏச்சப்பா வாராமல் சமாதிபீடம்
    என்னாலு மிருப்பவனே சித்தனாமே.
           
விளக்கவுரை :


57. சித்தனாகும் பூரணத்தைக் கும்பகத்தில்வைத்து
    சிறப்பான வாசியைத்தான் மனதுமிகநாட்டி
பித்தனாய்க் கும்பகத்தைப் பின்கலையில்வாங்கி
    பேரான கண்மணியை யிடைகலையில்வாங்கி
சுத்தமுடன் மையமதில் நடுகலையினின்று
    சூரியனை வம்பரத்தில் வகையுடனேதாக்கி
நித்தமே இருகலையில் பூரகத்தைமாட்டி
    நேரான பின்கலையில் வடகலையைவாங்கே.


விளக்கவுரை :


58. வாங்கியே மூவாண்டு வழக்கஞ்செய்து
    வாசியைத்தா னெப்போதும் பழக்கம்பண்ணி
தூங்கியே திரியாதே புலஸ்தியாகேள
    துப்புறவாய்ப் பழகிவந்தா லெல்லாஞ்சித்தி
ஏங்கியே வாடாதே வாசியோகம்
    யென்மகனே செய்துவந்தால் பழக்கமாகும்
ஓங்கியே மகத்தான வாசிதன்னை
    உத்தமனே செய்துவந்தால் சித்தியாமே.

விளக்கவுரை :


59. ........ ........ ........புலஸ்தியாகேள்
    அப்பனே லகுவாக நட...........
...... ..... ..... .... .... ...... ...... ..................
    ......... ........ ...... ....... ........... ....... ..........
........ ........... .............. ............. ................
    ........ ........ ....... .......... ............ ...........
...... ...... ..... .... ஞ்செய்தால்
    நவதுவாரங் களெல்லா மடையும்பாரே.

விளக்கவுரை :


60. பாரேதான் நவவாசல் தானுமுண்டு
    பாலகனே வொன்பதுமே தானடைக்கும்
சீரேதான் வாசியை நீ நடத்தும்போது
    சீறலுடனுந்தனது கனல்தான்மீறும்
வேரேதான் சிந்தனைக ளொடுக்கமாகி
    வேதாந்தத் தாயுருவைக் காணவெண்ணி
கூரேதான் சின்மயத்தி லிருந்துகொண்டு
    குணமான வாசியைத்தான் மூட்டிப்பாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar