அகத்தியர் பன்னிருகாண்டம் 411 - 415 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 411 - 415 of 12000 பாடல்கள்


411. செப்பலாம் யின்னம்வெகு வதிசயங்கள்
    தேற்றமுடன் சொல்லுகிறேன் புலஸ்தியாகேள்
ஒப்பமுடன் நர்மதா நதிக்குத்தெற்கே
    ஓகோகோ நாதாக்க ளிருப்பிடந்தான்
எப்போதும் வீற்றிருக்கும் பதியொன்றுண்டு
    எழிலான சிங்கள தேசமப்பா
அப்பெரிய பதிதனிலே விருட்சமப்பா
    அழகான தேவதா விருட்சமாமே.

விளக்கவுரை :


412. ஆமேதான் விருட்சமது கோடியுண்டு
    அழகான தோப்புண்டு பொய்கையுண்டு
நாமேதான் சொன்னபடி பொய்கைதன்னில்
    நடுவான மத்திபத்தில் மண்டபந்தான்
வேமேதான் யேமமென்ற மண்டபந்தான்
    வெளியரங்க மானதொரு விசித்திரரூபம்
தாமேதான் தேவாதி மண்டபந்தான்
    தகைமையுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே.

விளக்கவுரை :


413. பண்பான நீராழி மண்டபத்தில்
    பாங்கான தேவதச்சா விசுவகர்மர்
நண்பான தங்கமென்ற பாளந்தன்னால்
    நலமான விசுவரூப சுதந்தரங்கள்
கண்புடனே ரூபமென்ற ரேகையோடு
    கைலங்கிரி பர்வதம்போல் தானமைத்து
தண்மையுடன் சித்தர்முனி யிருக்கவேதான்
    தடாகமதிற் செய்துவைத்தார் விசுவர்தானே.

விளக்கவுரை :


414. தானான தேவதா விசுவரப்பா
    தரணியில் சித்தர்முனி யிருக்கவேதான்
கோனான குரூபீட மண்டபந்தான்
    கொற்றவனே கைலங்கிரி யென்னலாகும்
தேனான புலஸ்தியனே நண்பாகேளு
    தெய்வபுர மிதற்கீடு சொல்லப்போமோ
பானான மனோன்மணியாள் வாசஞ்செய்யும்
    பாங்கான தேவ மண்டபந்தானாமே. 

விளக்கவுரை :


415. மண்டபத்தை சுத்தியல்லோ மாமுனிவர்சித்தர்
    மதிப்புடனே ஒவ்வொரு படிகள்தோறும்
அண்டமுடி ராட்சதாள் பூதம்யாவும்
    அங்கணங்க ளொவ்வொன்றில் பாதுகாப்பார்
தண்டக ரிடிவனத்து சித்தர்தாமும்
    தகமையுடன் னொவ்வொரு படியில்நிற்பார்
கண்டிடவே நடுமையந் தன்னிலப்பா
    கைலாச ரிடியொருவ ரிருப்பார்தாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar