அகத்தியர் பன்னிருகாண்டம் 371 - 375 of 12000 பாடல்கள்
371. ஆமென்ற சித்துமுனி சொல்லும்போது
அங்ஙனவே மனதுவந்து சந்தோடித்து
நேமமுடன் முனிசொன்ன வார்த்தைதன்னை
நிட்களமாய் மெய்யென்று மனதிலுன்னி
தாமெனவே நூலதனைக் குகைக்குள்வைத்தேன்
தாரணியில் சிலசித்தர் பின்னதாக
ஓமமுடன் பெருநூலை வெளியிற்காட்ட
உத்தமனே வெகுகோடி மனுசெய்தாரே.
விளக்கவுரை :
372. மனுசெய்த படியாலே புலஸ்தியாகேள்
வையகத்தில் மானிடர்கள் பிழைக்கவென்று
கனுவுடனே யின்னூலை வெளியேவிட்டேன்
கண்டறிவான் விதியாளி சொல்வான்பாரு
அணுவளவு பாகமது பிசகாவண்ணம்
அப்பனே யானுரைத்தபெரு நூலப்பா
தணுவுடனே சதுருகத்தி லிருந்தநூலை
சாற்றினேன் புலஸ்தியர்க்காய்ப் பெருநூல்தானே.
விளக்கவுரை :
373. பெருநூலாங் காவியமாம் பன்னிரெண்டு
பேரான வொவ்வொரு முறைகளப்பா
அருமையாய் வொவ்வொரு முறைகளப்பா
அனந்தம்வகை சொல்லிவிட்டேன் லக்கோயில்லை
குருவான யெனதையர் சொற்படிக்கு
கோடான கோடிமுறை சொற்படிக்கு
திருவான மனோன்மணிதாய் கடாட்சத்தாலே
தீரமுடன் பாடிவைத்த பெருனூலாமே
விளக்கவுரை :
374. நூலான யின்னமொரு மார்க்கங்கேளு
நுணுக்கமுடன் புலஸ்தியனே சொல்வேனப்பா
தாலமாம் பதினெண்பேர் சித்தர்தாமும்
தகைமையுட னவரவர்க ளிருந்தநாடு
கோலமாஞ் சமாதிகள் பூண்டநாடு
கொற்றவனே நூல்பாடி வைத்ததேசம்
சீலமாம் அவரவர்கள் சீடவர்க்கம்
சிறப்புடனே ஆராய்ந்து சொல்வேன்பாரே.
விளக்கவுரை :
375. பாரேதான் காசிக்கு மேற்கேயப்பா
பாங்கான காயத்திரி பிரம்மநாடு
நேரேதான் டில்லிக்குக் கிழக்கேயப்பா
நேர்மையுடன் பனிமூடி யிருக்கும்நாடு
ஆரான வசுவனியாம் நதியொன் றுண்டு
அன்னதிக்கு நடுமையந் திட்டொன்றுண்டு
நூறான காதவழி யகலமுண்டு
நுணுக்கமுடன் சதுர மவ்வளவுதானே.
விளக்கவுரை :
அகத்தியர் பன்னிருகாண்டம் 371 - 375 of 12000 பாடல்கள்
அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar