அகத்தியர் பன்னிருகாண்டம் 16 - 20 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 16 - 20 of 12000  பாடல்கள்

agathiyar-panniru-kandam

16. நன்றான வார்த்தையது மிகவேபேசி
    நயமான விசுவாசக் காட்சியோடு
பன்றான பழிமுறைகள் விகற்பஞ்சொல்லி
    பட்சமுடன் நூலதனைப்பறிக்கவென்று
குன்றான மலையருகே வந்துநின்று
    கோடான கோடிமுறைகள் வாதுபேசி
வென்றான முகதாவில் விருப்பஞ்சொல்லி
    வேண்டியே சாத்திரத்தைக் கேட்பார்காணே.

விளக்கவுரை :

17. காணவே புலஸ்தியனே சொல்லக்கேளும்
    கருவான நூலிதனைக் கண்டாராய்ந்து
பூணவே மனதுவர நடந்தவா்க்கு
    புண்ணியனே இந்நூலைக் கொடுக்கவேண்டும்
வேணவே ஆசாரமது மிகவும்சொல்லி
    விருப்பமுடன் புத்திமதி பலவுங்கூறி
தோணவே அவா்தனக்கு நூலைஈய்ந்தால்
    தொல்லுலகில் நோ்ந்தகுறை விட்டதென்னே.

விளக்கவுரை :

18. என்னவே விட்டகுறை நோ்ந்துதானால்
    யெழிலான நூல் இதுவும் வாய்க்கும்பாரு
பன்னவே பல நூலைப் பார்த்திட்டாலும்
    பாரப்பா எந்தனுக்குப் பலியாதொன்றும்
சொன்னதொரு நூலிதிலே யாவும்காண்பாய்
    சுந்தரனே சிவராஜ யோகங்கிட்டும்
மன்னவனே பூலோக மிருந்துவாழ்வாய்
    மார்க்கவுடன் அஷ்டசித்தி பெறலாம்பாரே.

விளக்கவுரை :

19. பாரேதான் புலஸ்தியனே சொல்லக்கேளும்
    பட்சமுடன் நூலினது மார்க்கஞ்சொல்வேன்
நேரேதான் வாதமது வயித்தியமார்க்கம்
    நிசமான குளிகையது மெழுகுமார்க்கம்
சீரேதான் லேகியங்கள் பற்பமெல்லாம்
    சிறப்பான செந்தூரங் கபாடமெந்திரம்
கூரேதான் மாத்திரைகள் குளிகைகள்யாவும்
    குறிப்புடனே ஆக்கிராணஞ் செப்பக்கேளே.

விளக்கவுரை :

20. செப்பவென்றால் சூரணங்கள் எண்ணெய்யாவும்
    தெளிவான தயிலமுதல் திராவகங்கள்
ஒப்பமுடன் பிளாஸ்திரிகள் கிஷாயபாகம்
    உரிமைபெற அஞ்சனமுந் திலதப்போக்கும்
கொப்பெனவே கற்கங்கள் மெழுகுமார்க்கம்
    கொடிதான செயநீா்கள் உருக்குமார்க்கம்
தப்பிதங்கள் நேராமல் தரணியோர்க்கு
    சாற்றினேன் இன்னம்வெகு அதீதந்தானே.


விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar