அகத்தியர் பன்னிருகாண்டம் 366 - 370 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 366 - 370 of 12000 பாடல்கள்


366. தண்மையா மவரவர்கள் செய்தபாகம்
    தகைமையுடன் இன்நூலில் காணலாகும்
பண்மையாம் பண்டிதங்கள் மெத்தவுண்டு
    பாரினிலே செய்ததொரு மகிமையாவும்
உண்மையாம் பலநூலுங் கண்டாராய்ந்து
    உத்தமனே யானுரைத்தேன் காவியந்தான்
வண்மையாம் ரிடிமுனிவர் சொன்னனூலில்
    வளமையுடன் பெருமருந்து யில்லைதானே.

விளக்கவுரை :


367. தானான யென்னூல்போல லனேகஞ்சித்தர்
    தாட்சியுடன் பாடிவைத்தார் சிலநூல்கள்
கோனான வசுவனியாந்தேவர்தானும்
    கூறினார் துவாபர யுகத்திலப்பா
பானான பராபரியாள் மனோன்மணித்தாய்
    பாங்குடன் தானுரைத்த குருநூல்தன்னை
மானான வையகத்தி லெந்தனுக்காய்
    மனதுவந்து சொன்னதொரு குருநூலாமே.
          

விளக்கவுரை :


368. குருநூலாம் அசுவனியாந் தேவர்தானும்
    குறிப்புடனே தானுரைத்த வடநூல்தன்னை
சிறுநூலா யெந்தனுக்கு தேவர்தாமும்
    சிறப்புடனே உபதேசஞ் சொன்னார்பாரு
பெருநூலா யடியேனுங் காவியமாய்ப்
    பிரியமுடன் பாடிவைத்த காண்டமப்பா
ஒருநூலும் பன்னீரா யிரத்துக்கொப்பாய்
    உலகுதனி லுவமைசொல்ல முடியாதன்றே.

விளக்கவுரை :


369. அன்றான சாத்திரத்தைப் பிரித்துப்பார்த்து
    அருமையுள்ள பனிரெண்டு காண்டஞ்சொன்னேன்
குன்றான மலைபோன்ற காண்டந்தன்னை
    குருவான ரிடிமுனிவர் சித்தர்தாமும்
தென்றிசையில் வாழுகின்ற ரிடிமுனிவர்தாமும்
    தேர்ந்தெடுத்துக் கொண்டதொரு குருநூலாகும்
பன்றான காவியத்தை முனிவர்மெச்சி
    பட்சமுள்ள காவியத்தை வையென்றாரே.

விளக்கவுரை :


370. வையென்றார் குகைதனிலே ரிடியார்தாமும்
    வையமெல்லாஞ் சித்தாகிப் போகுமென்றார்
கைதவமாய் மீறுகின்ற கர்மிதாமும்
    காசினியில் வெகுகோடி மாண்பருண்டு
மெய்பேசி நூலதனை வாங்கிக்கொண்டு
    மேதினியில் வெகுசித்து ஆடுவார்கள்
பொய்யான தோடிகட்கு யிந்தநாலு
    பொருக்குமோ பூமிதனில் பொருக்காதாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar