அகத்தியர் பன்னிருகாண்டம் 401 - 405 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 401 - 405 of 12000 பாடல்கள்


401. காணவென்றால் வெகுகோடி மகிமையுண்டு
    காசினியில் கண்டவர்க ளாருமில்லை
பூணவே சிங்கமது வுரங்குங்காடு
    புகழான சிறுபுலிகள் உலாவுங்காடு
ஈணவே பலமிருக்ம் யிருக்குங்காடு
    எழிலான மாண்ப ரறியாதகாடு
தோணவே கண்ணுக்குத் தோற்றாகாடு
    தொல்லுலகோ ரறியாத வனமுமாச்சே.

விளக்கவுரை :


402. ஆச்சப்பா அவ்வனத்தில் கல்லொன்றுண்டு
    அப்பனே நூறு யோசனைதானப்பா
பேச்சப்பா சொல்லுதற்கு நாவுமில்லை
    பேரான வகலமது யெண்பதாகும்
காச்சலென்ற பரிதியது காணலாகா
    பாங்குடனே பனிமூடுங் குத்துக்கல்தான்
பாச்சலுடன் மேற்பாகஞ் செல்வதற்கு
    பாங்கான படியுண்டு சொல்லொண்ணாதே.

விளக்கவுரை :


403. உண்டான படியல்லோ லக்கோயில்லை
    உத்தமனே படிதோறுஞ் சித்துதாமும்
அண்டமது முகத்தளவாய் வரைகள்தோறும்
    அணியணியாய் சித்தர்முனி வீற்றிருப்பார்
கண்டாலே யின்னாட்டு மாண்பர்தன்மை
    கல்லாகச் சமைத்திடுவார் சித்துதாமும்
தண்டவனம் யாரேனுஞ் செல்லமாட்டார்
    தரணிதனில் சிவயோகி செல்வான்கேளே.

விளக்கவுரை :


404. கேளேதான் சித்தர்முனி ரிடிகள்தாம்
    கெவனமுடன் குளிகையது கொண்டுமல்லோ
நாளேதா னவ்வழியே போவாருண்டு
    நலமுடனே யவ்வழியில் வருவதுண்டு
வீளேதான் நாதாக்கள் குடியிருப்பு
    விண்ணுலக மிதற்கீடு சொல்லப்போமோ
ஆளேதான் அவ்வனத்தில் யாருஞ்செல்வார்
    அப்பனே மாய்கையென்ற சித்துதாமே.

விளக்கவுரை :


405. சித்தான நவகோடி ரிஷிகள்தாமும்
    சீரான மண்டபத்தில் வீற்றிருப்பார்
குத்தான மேற்கல்லி லதிசயங்கள்
    கொப்பெனவே மிகவுண்டு சொல்லொண்ணாது
முத்தான ஜோதியென்ற விருட்சந்தானும்
    முனையான சிகரமதி லிருக்கும்பாரு
சத்தான நகரமெல்லாஞ் சோதிகாட்டும்
    சதாசிவத்தின் பெருமையது சொல்லொண்ணாதே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar