அகத்தியர் பன்னிருகாண்டம் 156 - 160 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 156 - 160 of 12000 பாடல்கள்


156. உண்டான மாந்தர்களில் நிதிகள்கோடி
    வுத்தமனே சொல்வதற்கு லக்கோயில்லை
பண்டான பாக்கியமு மிகுதியுண்டு
    பண்புடனே சொல்வதற்கு முடியாதப்பா
திண்டான பொருளிருந்து மறைத்துச்சொல்வார்
    திறமுடனே கருமிகட்கு நோயும்போகா
சண்டாள மானதொரு பாவிகட்கு
    சட்டமுடன் மருந்ததுவும் பலியாதென்னே.

விளக்கவுரை :


157. என்னவே பண்டிதற்குப் பொய்யைக்கூறி
    யென்னிடத்தில் திரவியங்க ளில்லையென்று
உன்னவே மெய்மொழிபோல் தாமுறைத்து
    உத்தமனே சத்தியங்கள் மிகவேசெய்து
சொன்னதொரு சத்தியமு மெய்யென்றேதான்
    சுந்தரனே யுண்மையுள்ளா னென்றுசொல்லி
நன்னயமாய்க் குளிர்ந்தமுகம் வார்த்தைகூறி
    நாட்டினிலே கருமிகளு மிருப்பார்தானே.

விளக்கவுரை :


158. இருப்பாரே வெகுகோடி கருமியப்பா
    எழிலான கருமிகளின் மனத்தைத்தானும்
பொறுப்பான மனதுடனே யறியவேண்டும்
    பொலிவாக..............மருமிகளும் தருமியுண்டு
வெறுப்பகல யவர்மனதை யறிந்துநன்றாய்
    விருப்பமுடன் வயித்தியங்கள் செய்யவேண்டும்
கருப்புலவும் பூந்துமையாய்ப் புலஸ்தியாகேள்
    கண்மணியே யின்னமுனக் கறைவோன்பாரே.
 
விளக்கவுரை :


159. அறையவே பண்டிதங்க ளின்னஞ்சொல்வேன்
    அப்பனே மருந்தினது வேகங்கண்டு
நிறையவே நாடியின்றன் பலமுங்கண்டு
    நிறையான வயததுவும் லக்குகண்டு
குறையவே மருந்தினது சுறுக்குகண்டு
    குற்றமறப் பத்தியங்கள்..... ..................
முறைபோலப் பண்டிதங்கள்..... ..... பேர்க்
    ...... ........ ...... ......... .....யென்னலாமே.

விளக்கவுரை :


160. என்னவே பலநூலும் பார்க்கவேண்டும்
    யெழிலான நாடிகண் டுணரவேண்டும்
சொன்னமொழி தவறாது நடக்கவேண்டும்
    சுந்தரனே வார்த்தையது கூறவேண்டும்
நன்னயமா யிதம்பெறவே வார்த்தைவேண்டும்
    நலம்பெறவே பண்டிதங்கள் சொல்லவேண்டும்
தன்னலமாம் சாகரத்தை யொழிக்கவேண்டும்
    துலையாத பாவத்தை நீக்கநன்றே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar