அகத்தியர் பன்னிருகாண்டம் 376 - 380 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 376 - 380 of 12000 பாடல்கள்


376. தானான சதுரமது கோட்டையுண்டு
    தருவான ராட்சதர்க ளிருக்குங்கோட்டை
கானாறு குகையுண்டு மலைவளங்கள்
    கடிதான ராட்சதர்கள் தூங்குங்காடு
வேனான வெளிக்காடு மண்டபங்கள்
    வேதமுனி ரிடிக்கூட்ட மனேகமுண்டு
தேனான மணிபோன்ற சித்துதாமும்
    சிறப்புடனே தானிருக்கும் பதியுமாமே.

விளக்கவுரை :


377. பதியான நர்மதா நதிக்குத்தெற்கே
    பாங்கான வக்கினியா றொன்றுவுண்டு
மதியான சூரியரும் காணாநாடு
    மகத்தான வெள்ளானை யிருக்கும்நாடு
துதியான சிவலிங்கம் வளருநாடு
    துப்புரவாய் வகிலமெல்லாம் லிங்கப்பிரேஷ்டை
நிதிவிளையும் காஞ்சனமா மென்னுநாடு
    நிலையான சித்தர்முனி யிருக்கும்நாடே.

விளக்கவுரை :


378.  நாடான டில்லிக்கு வடக்கேயப்பா
    நலமான புலஸ்தியனே சொல்வேன்பாரீர்
காடான காடுவாயிரங் காதந்தான்
    கதீதமுள்ள சிங்கமது உறங்குங்காடு
நீடான வேங்கையது வடர்ந்தகாட்டில்
    நேர்மையுடன் நடுமைய மத்திபத்தில்
கோடான கோடிமுனி ரிடிகள்தாமும்
    குறிப்புடனே வீற்றிருக்கும் விடுதியாமே.

விளக்கவுரை :


379. விடுதியாம் ஆயக்கால் மண்டபந்தான்
    விண்ணுலகை யெட்டுகின்ற கோபுரந்தான்
படுநிலையில் ஒவ்வொரு பீடந்தன்னில்
    பாங்குடனே வீற்றிருப்பார் முனிவர்தாமும்
அடுநிலையில் சிகரம்வரை முடிவுமட்டும்
    அணியணியாய் வீற்றிருப்பார் ரிடிகள்தாமும்
முடியோடே முடிநெருங்கும் நாதர்கூட்டம்
    மூதுலகில் சொல்வதற்கு நாவொண்ணாதே.

விளக்கவுரை :


380. ஒண்ணாது கோபுரத்தை யளவுசொல்ல
    உத்தமனே யாதிசேட னாலுமாகா
அண்ணாந்து பார்த்தாலும் முடிதான்போகும்
    ஆகாகா சித்தருட கோபுரந்தான்
கண்ணாலே பார்ப்பதற்கு முடியாதப்பா
    கைலங்கிரி வாசலது யிதற்கீடுண்டோ
குண்ணான மகம்மேரு விதற்கீடுண்டோ
    கொற்றவனே கோபுரத்தின் பெருமைகாணே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar