அகத்தியர் பன்னிருகாண்டம் 421 - 425 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 421 - 425 of 12000 பாடல்கள்


421. முனியான யென்தேவா லோகநாதா
    மூதுல கைரைகண்ட சித்தேசாமி
தனியாக தங்க மண்டபத்திலேதான்
    தகமையுடன் கொலுவிருக்கும் மெந்தன்நாதா
கனிவுடனே கைலங்கிரி சேதிதன்னை
    களிப்புடனே யெங்களுக்குக் கழர வேண்டும்
இனிதான பவமகற்றி யெங்களுக்கு
    எழிலான வுபதேசஞ் சொல்லொண்ணாதோ.

விளக்கவுரை :


422. ஒண்ணாது காயாதி கற்பங்கொண்டு
    உத்தமனே வெகுகால மிருக்கவென்று
கண்ணபிரான் தன்பக்க லடியோம்சென்று
    காலடிகள் நமஸ்கார மிகவுஞ்செய்து
நண்ணவே நதாந்த சித்துரூபம்
    நாட்டிலே யொருவரால் சொல்லப்போமோ
வண்ணமுடன் நாதாந்த சித்துதாமும்
    வளமையுடன் யெங்களுக்கு விடைசொல்வீரே.

விளக்கவுரை :


423. விடையென்று கேட்கையிலே ரிடியார்தாமும்
    வேதாந்த சித்தருக்கு வினயஞ்சொல்வார்
தடையில்லா நாலுயுக வதிசயத்தை
    தாரணியில் சித்தருக்கும் சொல்வார்பாரு
கடையான பிரம்மாவு மெந்தன்மீதில்
    கருணைதனை நீக்கியல்லோ சாபந்தந்து
சடைபோன்ற பிரம்மாவும் சண்டையிட்டு
    தாரணியில் போகவென்று சபித்திட்டாரே.

விளக்கவுரை :


424. இட்டாரே சாபமது தீர்வதற்கு
    எழிலுடனே தாரணியில் வந்தேனென்றார்
சட்டமுடன் பிரம்மாவு மெந்தனுக்கு
    சாங்கமுடன் வுபதேசம் சொன்னதாலே
திட்டமுடன் வுபதேசங் வேண்டேனென்று
    தீர்க்கமுடன் தேவபுரம் அடுத்துயானும்
வட்டமுடன் தேவேந்திர பகவான்தன்னை
    வாதித்து சிலகேள்வி கேட்டேன்யானே.

விளக்கவுரை :


425. கேட்டேனே பிரம்மாவி னுபதேசங்கள்
    கெடியான யென்செவியிற் கேளாதென்றோ
மாட்டானே யுந்தனிட வுபதேசங்கள்
    மானிலத்தில் நீயுமொரு மனிதனல்லோ
பாட்டனார் வுந்தனிட பாட்டன்தானும்
    பாரினிலே யென்மரபுக் குறியோரல்லோ
மாட்டிமையாய் நீயுமொரு மாண்பனல்லோ
    மானிலத்தில் சென்மமென்று தள்ளிட்டேனே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar