அகத்தியர் பன்னிருகாண்டம் 126 - 130 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 126 - 130 of 12000 பாடல்கள்



126. வேண்டுமே குருவணக்கம் மிகவும்வேண்டும்
    விருப்பமுடன் மனதுவர நடக்க வேண்டும்
ஆண்டகைபோல் குருபாதந் தானினைத்து
    அப்பனே சிரங்குவித்து நமஸ்கரித்து
தூண்டியதோர் கருமான மறிவதற்கு
    துறையுடனே முறைபோல நூல்கள்கேட்டு
தாண்டமுடன் நூறாண்டு தானானாலும்
    தன்மையுடன் காத்திருந்து நூலைவாங்கே.
           
விளக்கவுரை :


127. வாங்கியே யவருக்கு முன்னேனில்லு
    வகையுடனே தொண்டுக்கு முதல்வனாக
தூங்கியே திரியாமல் முதலாய்நின்று
    துரைமுகத்தில் வூழியனாய்த் தானிருந்து
பாங்கியெனும் பெண்ணாசை விட்டொழித்துப்
    பாருலகி லிருப்பவனும் சித்தனாகும்
ஏங்கியே போகாமல் தீரவானாய்
    யெழிலுடனே யிருப்பவனே சீஷனாமே.

விளக்கவுரை :


128. சீஷனா யிருந்தாலு மவர்தமக்கு
    சீரலுடன் கேள்விகளுங் கேட்கும்போது
பாசமுடன் மனதுவந்து பட்சம்வைத்து
    பார்வைக்கு யெதிர்வார்த்தை மிகச்சொல்லாமல்
காஷாயமாம் வேடமதைத் தரித்துக்கொண்டு
    கவனசுத்தி கொண்டுதொரு ரிடிதமக்கு
தூஷணைக ளில்லாமல் சுகிர்தவானாய்
    துரைராஜ சுந்தரர்க்கு முன்னேநில்லே.

விளக்கவுரை :


129. நிற்கையிலே யெதிர்நின்று வாயாடாதே
    யென்மகனே புலஸ்தியனே செப்பக்கேளும்
அற்பமுடன் யென்மனதி லவரையெண்ணி
    அலட்சியமா யிருக்காதே மன்னாகேளு
சொற்பமென்று விடுகாதே தானாய்நின்று
    சுந்தரனே யவர்மனம்போல் நடந்துகொள்ளு
துற்பரவா வுன்மீதில் மனதுவைத்து
    துன்ப சாகரத்தைவிட்டு வாவென்பாரே.
    
விளக்கவுரை :


130. வாகவென்ற போதினிலே யுந்தனக்கு
    வாகான வரமுனக்கு வகுக்கலாச்சு
கோவென்ற ராஜனுந்தா னுனக்கீடுண்டோ
    கொப்பெனவே லோகமது வற்பவாழ்வில்
மாவெனவே அஷ்டாங்கம் யோகம்பெற்று
    மகத்தான பதவிகளும் உனக்குண்டாகும்
சாவென்ற நமனுமுன் கிட்டேவாரான்
    சதாகாலம் சமாதிதனி லிருக்கலாமே.
            
விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar