416. அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு
மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு
மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே
விளக்கவுரை :
417. உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலுங் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே
விளக்கவுரை :
[ads-post]
418. உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியான் நிலங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட
லுட்பரந்
தள்ளுயி ராவண்ணந் தாங்கிநின் றானே
விளக்கவுரை :
419. தாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே
விளக்கவுரை :
420. அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று
நல்கும்
பணுகினும் பார்மிசைப் பல்லுயி
ராகித்
தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே
விளக்கவுரை :