9. படைத்தல்
381. ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.
விளக்கவுரை :
382. நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்தெழும்
விந்துவே
விளக்கவுரை :
[ads-post]
383. இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள்
ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே
விளக்கவுரை :
384. தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு
விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முதல்
ஐந்துக்கும்
சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே.
விளக்கவுரை :
385. மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து
பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே
விளக்கவுரை :