11. அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன்
றில்லை
முயலும் முயலில் முடிவும் மற்
றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.
விளக்கவுரை :
12. கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே.
விளக்கவுரை :
[ads-post]
13. மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.
விளக்கவுரை :
14. கடந்துநினின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணம்எம்
மாயன்
கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம்
ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின்
றானே.
விளக்கவுரை :
15. ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந்
தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர்
தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.
விளக்கவுரை :