131. மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றில் ஆடுந்
திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே.
விளக்கவுரை :
132. பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார் அம்மன்றில் பிரியாப்
பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
விளக்கவுரை :
[ads-post]
133. பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையுங் கேட்டிருந் தார்புரை
அற்றே.
விளக்கவுரை :
134. புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு
ஒழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.
விளக்கவுரை :
135. சத்த முதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றி சேர்விடம்
வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள்
அப்பிலே.
விளக்கவுரை :