திருமூலர் திருமந்திரம் 1346 - 1350 of 3047 பாடல்கள்

திருமூலர் திருமந்திரம் 1346 - 1350 of 3047 பாடல்கள் 

thirumoolar-thirumanthiram

1346. அறிந்திடும் சக்கரம் அருச்சனை யோடே
எறிந்திடும் வையத்து இடரவை காணின்
மறிந்திடு மன்னனும் வந்தனை செய்யும்
பொறிந்திடும் சிந்தை புகையில்லை தானே.

விளக்கவுரை :


1347. புகையில்லை சொல்லிய பொன்னொளி யுண்டாம்
குகையில்லை கொல்வது இலாமையி னாலே
வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம்
சிகையில்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே.

விளக்கவுரை :

[ads-post]

1348. சேர்ந்தவர் என்றும் திசையொளி யானவர்
காய்ந்தெழு மேல்வினை காண்கி லாதவர்
பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.

விளக்கவுரை :

1349. ஒளியது ளமுன் கிரீமது ஈறாம்
களியது சக்கரம் கண்டறி வார்க்குத்
தெளிவது ஞானமும் சிந்தையும் தேறப்
பணிவது பஞ்சாக் கரமது வாமே.

விளக்கவுரை :

1350. ஆமே சதாசிவ நாயகி யானவள்
ஆமே அதோமுகத்துள் அறி வானவள்
ஆமே சுவைஒளிஊறுஓசை கண்டவள்
ஆமே அனைத்துயிர் தன்னுளும் ஆமே.

விளக்கவுரை :

திருமூலர் சித்தர், திருமூலர் திருமந்திரம், thirumoolar siththar, thirumoolar thirumanthiram, siththarkal