141. சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்இன்
வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற்
பாதமே.
விளக்கவுரை :
142. போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணியர்
ஆயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போயடைந்தார்
விண்ணே.
விளக்கவுரை :
[ads-post]
2. யாக்கை நிலையாமை
143. மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினைச்
சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானார்ப்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.
விளக்கவுரை :
144. பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்ட அப் பெண்டிரும் மக்களும்
பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.
விளக்கவுரை :
145. ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று
பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச்
சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்
தார்களே.
விளக்கவுரை :