176. உடம்போடு உயிரிடை விட்டோடும் போது
அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை
எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர்
சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.
4. இளமை நிலையாமை
177. கிழக்கெழுந்த் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா
மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில
நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே.
விளக்கவுரை :
178. ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி
வாரில்லை
நீண்டன காலங்கள் நீண்டு
கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே.
விளக்கவுரை :
[ads-post]
179. தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்று கொள்ளும் உயிருள்ள
போதே.
விளக்கவுரை :
180. விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட
நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை
யார்க்கும்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத்
தேனே.
விளக்கவுரை :