221. ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்ற
கண்சுட ரோன் உலகு ஏழும் கடந்த அத்
தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.
விளக்கவுரை :
222. ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே.
விளக்கவுரை :
[ads-post]
223. அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து
தங்கி இருக்கும் வகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப்
பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே.
விளக்கவுரை :
12. அந்தண ரொழுக்கம்
224. அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும்
நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின்று
ஆங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.
225. வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு
வோர்க்களே.
விளக்கவுரை :