231. சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்விட் டோடும்
உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை
யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.
விளக்கவுரை :
232. திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதம் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே.
விளக்கவுரை :
[ads-post]
233. மறையோர் அவரே மறையவர் ஆனால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையினால்
தூய்மை
குறையோர்தன் மற்றுள்ள கோலா கலமென்று
அறிவோர் மறைதெரிந்து அந்தண ராமே.
விளக்கவுரை :
234. அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேரும்
செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.
விளக்கவுரை :
235. வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கது
போதாந்த மாம்பரன் பாற்புகப்
புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியும்
நண்ணுமே.
விளக்கவுரை :