246. கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி
உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன்
கடனே.
விளக்கவுரை :
247. தத்தம்சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமுஞ்செயும் அம்மையில்
இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன்
கடனே.
விளக்கவுரை :
[ads-post]
14. வானச் சிறப்பு
248. அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை
தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே.
விளக்கவுரை :
249. வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய
தெண்ணீர்
கரையில்லை எந்தை கழுமணி யாறே.
விளக்கவுரை :
15. தானச் சிறப்பு
250. ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை
உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம்
அறிமினே.
விளக்கவுரை :