256. துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே.
விளக்கவுரை :
257. தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன் தெய்வ மாக உயிர்க்கின்ற
பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே.
விளக்கவுரை :
[ads-post]
258. திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக் கேடில்
புகழோன்
விளைக்கும் தவமறம் மேற்றுணை யாமே.
விளக்கவுரை :
259. பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்று உங்களால் ஒன்றும் ஈந்தது
வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.
17. அறஞ்செயான் திறம்
260. எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம்
வட்டிகொணடு ஈட்டியே மண்ணில்
முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே.
விளக்கவுரை :