71. மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே.
விளக்கவுரை :
72. எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்தண் நியமங்கள் செய்யுமின்
என்றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந்
தானே.
விளக்கவுரை :
[ads-post]
5. திருமூலர் வரலாறு
73. நந்தி திருவடி நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து
போற்றிசெய்
தந்தி மதிபுனை அரனடி நாள்தொறும்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.
விளக்கவுரை :
74. செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி
தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக்
கண்டபின்
ஒப்பிலா எழுகோடி யுகமிருந் தேனே.
விளக்கவுரை :
75. இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித்து
அடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.
விளக்கவுரை :