பட்டினச் சித்தர் பாடல்கள் 106 - 110 of 196 பாடல்கள்
106. என் செய லாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே
உன் செய லேயென்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே
விளக்கவுரை :
107. திருவேடம் ஆகித் தெருவில் பயின் றென்னைத் தேடிவந்த
பரிவாகப் பிச்சை பகருமென் றானைப்பதம் பணிந்தேன்
கருவாகும் ஏதக் கடற்கரை மேவக் கருதும் என்னை
உருவாகிக் கொள்ள வல்லோ இங்ங னேசிவன் உற்றதுவே
விளக்கவுரை :
108. விட்டேன் உலகம் விரும்பேன் இருவினை வீணருடன்
கிட்டேன் அவர் உரை கேட்டும் இரேன் மெய் கெடாத நிலை
தொட்டேன் சுகதுக்கம் அற்றுவிட்டேன் தொல்லை நான் மறைக்கும்
எட்டேன் எனும்பரம் என்னிடத்தே வந்து இங்கு எய்தியதே!
விளக்கவுரை :
109. அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும்
விட்டேறிப் போன வெளிதனிலே வியப் பொன்று கண்டேன்
வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந் திருக்க
எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றதே.
விளக்கவுரை :
110. எரி எனக்கென்னும் புழுவோ எனக் கென்னும் இந்த மண்ணும்
சரி எனக் கென்னும் பருந்தோ எனக்கென்னும் தான் புசிக்க
நரி எனக் கென்னும் புன்னாய் எனக்கென்னும் இந்நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன்; இதனால் என்ன பேறு எனக்கே?
விளக்கவுரை :
பட்டினச் சித்தர் பாடல்கள் 106 - 110 of 196 பாடல்கள்
பட்டினச் சித்தர், பட்டினச் சித்தர் பாடல்கள், pattina siththar, pattina siththar paadalkal, siththarkal