பட்டினச் சித்தர் பாடல்கள் 131 - 135 of 196 பாடல்கள்

பட்டினச் சித்தர் பாடல்கள் 131 - 135 of 196 பாடல்கள்


131. தாயாரும் சுற்றமும் பெண்டிரும் கைவிட்டுத் தாழ்ந்திடுநாள்
“நீயாரு ? நானார்?” எனப்பகர் வார் அந்த நேரத்திலே
நோயாரும் வந்து குடிகொள்வரே கொண்ட நோயும் ஒரு
பாயாரும் நீயுமல்லால் பின்னையேது நட் பாமுடலே

விளக்கவுரை :


132. ஆயும் பொழுது மயிர்க்கால்கள் தோறும் அரும் கிருமி
நோயும் மலக்குட்டையாகிய காயத்தைச் சுட்டுவிட்டால்
பேயும் நடனம் இடும் கடமாம் என்று பேசுவதை
நீயும் அறிந்திலையோ? பொருள் தேட நினைந்தனையே

விளக்கவுரை :

133. பூணும் பணிக்கல்ல பொன்னுக்குத் தானல்ல பூமிதனைக்
காணும் படிக்கல்ல மங்கையர்க்கல்ல நற் காட்சிக்கல்ல
சேணுங் கடந்த சிவனடிக் கல்ல என் சிந்தை கெட்டுச்
சாணும் வளர்க்க அடியேன் படுந்துயர் சற்றல்லவே !

விளக்கவுரை :


134. வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு
எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனி முடிந்து
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே
முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே?

விளக்கவுரை :

135. எரு முட்டை பிட்கில் உதிர்ந்திடும் செல்லுக்கு எவர் அழுவார்?
கருமுட்டை புக்குக் கழலகன் றீர்கன துக்கமதாய்ப்
பெருமுட்டுப் பட்டவர் போல் அழும் பேதையீர் பேத்துகிறீர்
ஒரு முட்டும் வீட்டும் அரன் நாமம் என்றைக்கும் ஓதுமினே !

விளக்கவுரை :

பட்டினச் சித்தர், பட்டினச் சித்தர் பாடல்கள், pattina siththar, pattina siththar paadalkal, siththarkal