பட்டினச் சித்தர் பாடல்கள் 71 - 75 of 196 பாடல்கள்

பட்டினச் சித்தர் பாடல்கள் 71 - 75 of 196 பாடல்கள்


71. பொன்னால் பிரயோசனம்பொன் படைத்தார்க்குண்டு; பொன்படைத்தோன்
தன்னால் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு அத்தன்மையைப்போல்
உன்னால்பிர யோசனம் வேணதெல் லாம்உண்டு உனைப்பணியும்
என்னால்பிர யோசனம் ஏதுண்டு? காளத்தி ஈச்சுரனே!

விளக்கவுரை :

72. வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன்; மாதுசொன்ன
சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டு செய்து
நாளாறில் கண்இடந்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே?

விளக்கவுரை :

73. முப்போதும் அன்னம் புசிக்கவும் தூங்கவும் மோகத்தினால்
செப்போது இளமுலை யாருடன் சேரவும் சீவன்விடும்
அப்போது கண்கலக் கப்படவும் வைத்தாய் ஐயனே!
எப்போது காணவல் லேன்? திருக் காளத்தி ஈச்சுரனே!

விளக்கவுரை :

74. இரைக்கே இரவும் பகலும் திரிந்திங்கு இளைத்துமின்னார்
அரைக்கே அவலக் குழியருகே அசும் பார்ந்தொழுகும்
புரைக்கே உழலும் தமியேனை ஆண்டருள்! பொன்முகலிக்
கரைக்கே கல்லால நிழற்கீழ் அமர்ந்தருள் காளத்தியே!

விளக்கவுரை :

75. நாறும் குருதிச் சலதாரை; தோற்புரை நாள் தொறும்சீ
ஊறும் மலக்குழி காமத்துவாரம் ஒளித்திடும்புண்
தேறும் தசைப்பிளப் பந்தரங் கத்துள சிற்றின்பம்விட்டு
ஏறும் பதந்தருவாய்! திருக் காளத்தி ஈச்சுரனே!

விளக்கவுரை :

பட்டினச் சித்தர், பட்டினச் சித்தர் பாடல்கள், pattina siththar, pattina siththar paadalkal, siththarkal