பட்டினச் சித்தர் பாடல்கள் 126 - 130 of 196 பாடல்கள்

பட்டினச் சித்தர் பாடல்கள் 126 - 130 of 196 பாடல்கள்


126. விதியார் படைப்பும் அரியார் அளிப்பும் வியன் கயிலைப்
பதியார் துடைப்பும் நம் பால் அணுகாது பரமானந்தமே
கதியாகக் கொண்டுமற் றெல்லாம் துயிலில் கனவென நீ
மதியா திருமன மே இது காண் நல் மருந்துனக்கே !

விளக்கவுரை :

127. நாய்க்குண்டு தெண்டு நமக்குண்டு பிச்சை நமனைவெல்ல
வாய்க்குண்டு மந்திர பஞ்சாட் சரம் மதி யாமல்வரும்
பேய்க்குண்டு நீறு திகைப்புண்டு நின்ற பிறவிப்பிணி
நோய்க்குண்டு தேசிகன் தன் அருள் நோக்கங்கள் நோக்குதற்கே !

விளக்கவுரை :


128. நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆக நீதிநெறி
ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்த்ர யோகநிலை
நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே.

விளக்கவுரை :


129. நான் எத்தனை புத்தி சொன்னாலும் கேட்கிலை நன்னெஞ்சமே
ஏன் இப்படிகெட் டுழலுகின்றாய்? இனி ஏதுமில்லா
வானத்தின் மீனுக்கு வன் தூண்டில் இட்ட வகையதுபோல்
போனத்தை மீள நினைக்கின்றனை என்ன புத்தியிதே !

விளக்கவுரை :

130. அஞ்சக் கரமெனுங் கோடாலி கொண்டிந்த ஐம்புலனாம்
வஞ்சப் புலக்கட்டை வேர் அறவெட்டி வளங்கள் செய்து
விஞ்சத் திருத்திச் சதாசிவம் என்கின்ற வித்தையிட்டுப்
புன்செக் களை பறித்தேன் வளர்த்தேன் சிவ போகத்தையே !

விளக்கவுரை :

பட்டினச் சித்தர், பட்டினச் சித்தர் பாடல்கள், pattina siththar, pattina siththar paadalkal, siththarkal