பட்டினச் சித்தர் பாடல்கள் 111 - 115 of 196 பாடல்கள்

பட்டினச் சித்தர் பாடல்கள் 111 - 115 of 196 பாடல்கள்


111. அண்ணல்தன் வீதி அரசிருப் பாகும் அணி படையோர்
நண்ணொரு நாலொன்பதாம் அவர் ஏவலும் நண்ணும்இவ்வூர்
துண்ணென் பசிக்கு மடைப்பள்ளியான் சுகமுமெல்லாம்
எண்ணிலி காலம் அவமே விடுத்தனம் எண்ணரிதே !

விளக்கவுரை :

112. என்பெற்ற தாயாரும் என்னைப் ‘பிண’ மென்று இகழ்ந்து விட்டார்;
பொன்பெற்ற மாதரும் ‘போ’ மென்று சொல்லிப் புலம்பி விட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம் உடைத்தார்;
உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே!

விளக்கவுரை :

113. கரையற்ற பல்லும் கரித்துணி ஆடையும் கள்ளமின்றிப்
பொறை யுற்ற நெஞ்சமும் பொல்லாத ஊணும் புறந்திண்ணையும்
தரையில் கிடப்பும் இரந்துண்ணும் ஓடும் சகமறியக்
குறைவற்ற செல்வமென் றேகோல மாமறை கூப்பிடுமே.

விளக்கவுரை :

114. எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய்
முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூட ரெல்லாம்
கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர், கருத்தில் வையார்
பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே.

விளக்கவுரை :

115. வாய்நாறும் ஊழல் மயிர்ச்சிக்கு நாறிடும் மையிடுங்கண்
பீ நாறும் அங்கம் பிணவெடி நாறும் பெருங்குழி வாய்ச்
சீ நாறும் யோனி அழல்நாறும் இந்திரியப் பேறு சிந்திப்
பாய்நாறும் மங்கையர்க் கோஇங்ஙனே மனம் பற்றியதே?

விளக்கவுரை :

பட்டினச் சித்தர், பட்டினச் சித்தர் பாடல்கள், pattina siththar, pattina siththar paadalkal, siththarkal