பட்டினச் சித்தர் பாடல்கள் 191 - 196 of 196 பாடல்கள்

பட்டினச் சித்தர் பாடல்கள் 191 - 196 of 196 பாடல்கள்


191. வான்றேடு மறையேயோ மறைதேடும் பொருளையோ
ஊன்றேடும் உயிரேயோ உயிர்தேடும் உணர்வேயோ
தான்தேட நான்தேடச் சகலமெலாம் தனைத்தேட
நான்தேடி நான்காண நானாரோ நானாரோ.

விளக்கவுரை :

192. நாப்பிளக்கப் பொய் உரைத்துநவநிதியம் தேடி
நலன் ஒன்றும் அறியாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்

விளக்கவுரை :

193. காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே !

விளக்கவுரை :

194. மத்தளை தயிர்உண்டானும் மலர்மிசை மன்னி னானும்
நித்தமும் தேடிக் காணா நிமலனே நீஇன் றேகிச்
செய்தகளை கயல்பாய நாங்கூர் சேந்தனை வேந்தன் இட்ட
கைத்தளை நீக்கி என்முன் காட்டு வெண் காட்டு ளானே !

விளக்கவுரை :

195. வடிவந்தானும் வாலிபம் மகளும் தாயும் மாமியும்
படிகொண்டாரும் ஊரிலே பழிகொண்டால் நீதியோ
குடிவந்தானும் ஏழையோ ? குயவன் தானும் கூழையோ ?
நடுநின்றானும் வீணனோ ? நகரம் சூறை ஆனதே.

விளக்கவுரை :

196. மண்ணும் உருகும் மரம் உருகும் மாயை உருகும் மால்உருகும்
பெண்ணும் உருகும் ஆண் உருகும் பேதாபேத வகை உருகும்
அண்ணல் உருகும் இடத்தமர்த்த ஆத் தாள் உருகும் அரவணையான்
எண்ணி உருகும் குருநாதன் என்பால் உரைத்த ஓர் மொழியே.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர், பட்டினச் சித்தர் பாடல்கள், pattina siththar, pattina siththar paadalkal, siththarkal