போகர் சப்தகாண்டம் 4626 - 4630 of 7000 பாடல்கள்
4626. கேட்டதொரு வடிவேலர்
பட்சிக்கல்லோ கிருபையுடன் போகரிஷிநாதர்தானும்
வாட்டமுடன்
பொன்மயிலாந்தன்னைக்கண்டு வளமான வுத்தாரஞ் சொல்லுற்றார்
நீட்டமுடன்
திருவேலரிஷியார்தாமும் நீதியுடன் அரிச்சந்திர சித்துமுன்னே
தேட்டமுடன் கண்டறிந்து
வந்தபின்பு செப்பஉவேன் வடையெனக்கு என்றிட்டாரே
விளக்கவுரை :
4627. என்றுமே திருவேல
ரிஷியார்சொல்ல ஏத்தமுடன் வுத்தாரம் பெற்றுமேதான்
வென்றிடவே மறுபடியும்
திருவேலர்முன்னே வேகமுடன் வந்தல்லோ வணங்கிநின்றேன்
குன்றான மலைமேலே
வுச்சிதன்னில் கொப்பெனவே எந்தனையும் போகச்சொன்னார்
நன்றாக வடயேனும்
விடையும்பூண்டு நலமாக யுந்தனையும் காணலாச்சே
விளக்கவுரை :
[ads-post]
4628. காணவே நாளாச்சுதென்றுசொல்லி
கருத்துடனே தாள்பணிந்துகூறும்போது
பூணவே போகரிஷிநாதருக்கு
பொன்மயிலும் மனதுவந்து என்னசொல்லும்
தோணவே காலாங்கிநாதர்சீஷர்
துப்புரவாய் எந்தனையுங் கண்டதாலே
வேணபடி யுந்தனுக்கு
வுபதேசங்கள் விருப்பமுடன் வுரைப்பேனென்று சொல்லலாச்சே
விளக்கவுரை :
4629. ஆச்சப்பா காலாங்கி நாதர்பாதா
அருண்மைந்தா சொல்லுகிறேன் உந்தனுக்கு
வீச்சுடனே
திரேதாயினுகத்திலப்பா விண்ணுலகு தெய்வலோகபதியில்யானும்
மாச்சலுடன் காகோடி
ரிஷிகள்தன்னில் மகத்தான மகிமைகளுங்கிரியைபூண்டு
ஆச்சரிய மாகவல்லோ
இந்திரன்பக்கல் அமர்ந்தேனே கொலுமேடை பக்கல்தானே
விளக்கவுரை :
4630. தானான சித்தர்கூட
மண்டபத்தின் தகமையுடன் இந்திரனார்கொலுவிருக்க
தேனான
ரம்பையூர்வசியாள்தானும் சிறப்புடனே நாட்டிங்கள் செய்துநிற்க
பானான வூர்வசியாள்
தன்னைப்பார்த்து பட்சமுடன் கலவிக்கு எண்ணங்கொண்டு
மானான மகத்துவமாம்
ரிஷியார்தாமும் மார்க்கமுடன் காதலது கொண்டிட்டீரே
விளக்கவுரை :