அகப்பேய் சித்தர் பாடல்கள் 31 - 35 of 90 பாடல்கள்
           
31. அறிந்து நின்றாலும்                        அகப்பேய்
          அஞ்சார்கள் சொன்னேனே
புரிந்த வல்வினையும்                          அகப்பேய்
          போகாதே யுன்னைவிட்டு.

விளக்கவுரை :
           
32. ஈசன் பாசமடி                                  அகப்பேய்
          இவ்வண்ணங் கண்டதெல்லாம்
பாசம் பயின்றதடி                                 அகப்பேய்
          பாரமது கண்டாயே.

விளக்கவுரை :
           
33. சாத்திர சூத்திரமும்                          அகப்பேய்
          சங்கற்ப மானதெல்லாம்
பார்த்திட லாகாதே                                அகப்பேய்
          பாழ்பலங் கண்டாயே.

விளக்கவுரை :
           
34. ஆறு கண்டாயோ                            அகப்பேய்
          அந்த வினைதீர
தேறித் தெளிவதற்கே                            அகப்பேய்
          தீர்த்தமு மாடாயே.

விளக்கவுரை :
           
35. எத்தனை காலமுந்தான்                    அகப்பேய்
          யோக மிருந்தாலென்
மூத்தனு மாவாயோ                              அகப்பேய்
          மோட்சமு முண்டாமோ.

விளக்கவுரை :



அகப்பேய் சித்தர் பாடல்கள் 26 - 30 of 90 பாடல்கள்
           
26. யோக மாகாதே                               அகப்பேய்
          உள்ளது கண்டக்கால்
தேக ஞானமடி                                      அகப்பேய்
          தேடாது சொன்னேனே.

விளக்கவுரை :
           
27. ஐந்துதலை நாகமடி                         அகப்பேய்
          ஆதாயங் கொஞ்சமடி
இந்தவிஷந் தீர்க்கும்                             அகப்பேய்
          எம்மிறை கண்டாயே.

விளக்கவுரை :
           
28. இறைவ னென்றதெல்லாம்               அகப்பேய்
          எந்த விதமாகும்
அறை நீகேளாய்                                   அகப்பேய்
          ஆனந்த மானதடி.

விளக்கவுரை :
                   
29. கண்டு கொண்டேனே                        அகப்பேய்
          காதல் விண்டேனே
உண்டு கொண்டேனே                            அகப்பேய்
          உள்ளது சொன்னாயே.

விளக்கவுரை :
           
30. உள்ளது சொன்னாலும்                     அகப்பேய்
          உன்னாலே காண்பாயே
கள்ளமுந் தீராதே                                  அகப்பேய்
          கண்டாக்குக் காமமடி.

விளக்கவுரை :
Powered by Blogger.