அகப்பேய் சித்தர் பாடல்கள் 21 - 25 of 90 பாடல்கள்

21. எத்தனை சொன்னாலும்                   அகப்பேய்
          என்மனந் தேறாதே  
சித்து மசித்தும்விட்டே                          அகப்பேய்
          சேர்த்துநீ காண்பாயே.

விளக்கவுரை :
           
22. சமய மாறுபடி                                 அகப்பேய்
          தம்மாலே வந்தவடி
அமைய நின்றவிடம்                             அகப்பேய்
          ஆராய்ந்து சொல்வாயே.

விளக்கவுரை :
           
23. ஆறாறு மாகுமடி                             அகப்பேய்
          ஆகாது சொன்னேனே
வேறே யுண்டானால்                             அகப்பேய்
          மெய்யது சொல்வாயே.

விளக்கவுரை :
           
24. உன்னை யறிந்தக்கால்                    அகப்பேய்
          ஒன்றையுங் சேராயே
உன்னை யறியும்வகை                         அகப்பேய்
          உள்ளது சொல்வேனே.

விளக்கவுரை :
           
25. சரியை யாகாதே                             அகப்பேய்
          சாலோகங் கண்டாயே
கிரியை செய்தாலும்                             அகப்பேய்
          கிட்டுவ தொன்றுமில்லை.

விளக்கவுரை :        



அகப்பேய் சித்தர் பாடல்கள் 16 - 20 of 90 பாடல்கள்
           
16. வன்னம் புவனமடி                                     அகப்பேய்
          மந்திர தந்திரமும்
இன்னமுஞ் சொல்வேனே                       அகப்பேய்
          இம்மென்று கேட்பாயே.

விளக்கவுரை :
           
17. அத்தி வரைவாடி                                      அகப்பேய்
          ஐம்பத்தோ ரட்சரமும்
மித்தையாங் கண்டாயே                        அகப்பேய்
          மெய்யென்று நம்பாதே.

விளக்கவுரை :
           
18. தத்துவ மானதடி                                       அகப்பேய்
          சகலமாய் வந்ததடி
புத்தியுஞ் சொன்னேனே                         அகப்பேய்
          பூத வடிவலவோ.

விளக்கவுரை :
           
19. இந்த விதங்களெல்லாம்                   அகப்பேய்
          எம்மிறை யல்லவடி
அந்த விதம்வேறே                               அகப்பேய்
          ஆராய்ந்து காணாயோ.

விளக்கவுரை :
           
20. பாவந் தீரவென்றால்                        அகப்பேய்
          பாவிக்க லாகாதே
சாவது மில்லையடி                              அகப்பேய்
          சற்குரு பாதமடி.

விளக்கவுரை :
Powered by Blogger.