அகப்பேய் சித்தர் பாடல்கள் 36 - 40 of 90 பாடல்கள்
           
36. நாச மாவதற்கே                              அகப்பேய்
          நாடாதே சொன்னேனே      
பாசம் போனாலும்                                அகப்பேய்
          பசுக்களும் போகாவே.

விளக்கவுரை :
           
37. நாண மேதுக்கடி                             அகப்பேய்
          நல்வினை தீர்ந்தக்கால்
காண வேணுமென்றால்                        அகப்பேய்
          காணக் கிடையாதே.

விளக்கவுரை :
           
38. சும்மா இருந்துவிடாய்                    அகப்பேய்
          சூத்திரஞ் சொன்னேனே
சும்மா இருந்தவிடம்                             அகப்பேய்
          சுட்டது கண்டாயே.

விளக்கவுரை :
           
39. உன்றனைக் காணாதே                      அகப்பேய்
          ஊனுள் நுழைந்தாயே
என்றனைக் காணாதே                           அகப்பேய்
          இடத்தில் வந்தாயே.

விளக்கவுரை :
           
40. வான மோடிவரில்                           அகப்பேய்
          வந்தும் பிறப்பாயே
தேனை யுண்ணாமல்                            அகப்பேய்
          தெருவோ டலைந்தாயே.

விளக்கவுரை :



அகப்பேய் சித்தர் பாடல்கள் 31 - 35 of 90 பாடல்கள்
           
31. அறிந்து நின்றாலும்                        அகப்பேய்
          அஞ்சார்கள் சொன்னேனே
புரிந்த வல்வினையும்                          அகப்பேய்
          போகாதே யுன்னைவிட்டு.

விளக்கவுரை :
           
32. ஈசன் பாசமடி                                  அகப்பேய்
          இவ்வண்ணங் கண்டதெல்லாம்
பாசம் பயின்றதடி                                 அகப்பேய்
          பாரமது கண்டாயே.

விளக்கவுரை :
           
33. சாத்திர சூத்திரமும்                          அகப்பேய்
          சங்கற்ப மானதெல்லாம்
பார்த்திட லாகாதே                                அகப்பேய்
          பாழ்பலங் கண்டாயே.

விளக்கவுரை :
           
34. ஆறு கண்டாயோ                            அகப்பேய்
          அந்த வினைதீர
தேறித் தெளிவதற்கே                            அகப்பேய்
          தீர்த்தமு மாடாயே.

விளக்கவுரை :
           
35. எத்தனை காலமுந்தான்                    அகப்பேய்
          யோக மிருந்தாலென்
மூத்தனு மாவாயோ                              அகப்பேய்
          மோட்சமு முண்டாமோ.

விளக்கவுரை :
Powered by Blogger.