திருமூலர் திருமந்திரம் 166 - 170 of 3047 பாடல்கள்
166. குடையும் குதிரையும் கொற்றவா ளுங்கொண்டு
இடையும்அக் காலம் இருந்தது நடுவே
புடையு மனிதனார் போக்கும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே.
விளக்கவுரை :
167. காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர்
பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச்
செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போன
இக்கூட்டையே.
விளக்கவுரை :
[ads-post]
3. செல்வம் நிலையாமை
168. அருளும் அரசனும் ஆனையம் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன்
முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச்
சேரின்
மருளும் பினையவன் மாதவ மன்றே.
விளக்கவுரை :
169. இயக்குறு திங்கள் இரும்பிழப்பு ஒக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும்
வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ
மாமே.
விளக்கவுரை :
170. தன்னது சாயை தனக்குத வாதுகண்டு
என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.
விளக்கவுரை :