திருமூலர் திருமந்திரம் 126 - 130 of 3047 பாடல்கள்
126. முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து
அப்பரி சாக அமர்ந்திருந் தாரே.
விளக்கவுரை :
127. இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும்
நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பைக்
குறித்தங்கு
இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே.
விளக்கவுரை :
[ads-post]
128. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்
சோம்பர் கண் டார்அச் சுருதிக்கண்
தூக்கமே.
விளக்கவுரை :
129. தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும்
தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும்
தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ்
வாறே.
விளக்கவுரை :
130. எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன்
தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர்
மாணிக்கமே.
விளக்கவுரை :