போகர் சப்தகாண்டம் 766 - 770 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

766. கட்டிவைத்து முன்போலே புடத்தைப்போடு காணப்பா ஏழுபுடம்போட்டுத்தீரு
அட்டிவைத்த தந்தம்போல் இருக்கும்பாரு ஆச்சரிய சாரத்தின்முடிவு சொல்லப்போகா
முட்டிவைத்து சாரத்தில் செயநீர் கோடிமுதல் அண்டகுருக்கோடி செந்தூரங்கோடி
பொட்டிவைத்து திறந்ததுபோல் வாதமாச்சு போக்கதிலே மெத்தவுண்டு புகட்டியாட்டே

விளக்கவுரை :


767. ஆடவேசாரத்தைக்கட்டியாக அதின்மேலே சவ்வீரபூரம்போட்டு
நீடவேபகழோடு சூதமைந்தும் நேரானவாய்நீரால் அரைத்துப்பூசி
கூடவேசண்ணாம்புக் குகையிலிட்டு கூசாதே கரியோட்டிலூதிவாங்கு
சூடவே நீராகும் பீங்கானில்வைத்து துடியாகப் பனியில்வைக்கச் செயநீராமே

விளக்கவுரை :

[ads-post]

768. மின்னஞ்செயநீரால் சொல்லக்கேளு ஆச்சரியஞ் சூதவித்தைக் கல்வத்திட்டு
வேமுன்னஞ்செயநீரால் அரைத்தரைத்து வெகுளாதே ரவிதனிலே காயப்போடு
தாமின்னம் இருபதுநாள் அரைத்தரைத்து சார்பாக ரவிதனிலே காயப்போடு
சேமின்னம் ஏழுசட்டைநீக்கிப்போடு சேர்ந்திருக்கும் சத்தானும் செய்திகேளே

விளக்கவுரை :


769. சேதிகள்தேங்காயின் குடுக்கையிலே வார்த்து சிறப்பாக மெழுகடைத்து
வைத்துக்கொண்டு வாதிகேள் ரவிமதியில் தகடுவாங்கி வளமான ரசம்தடவி
புடத்தைப்போடு பாதிகள் பதினாறுமாற்றுமாகும் பாசத்தில் வேதையுமாம் பாருபாரு
சோதிகேளிந்தரசம் தின்றால் காயஞ்சுறுக்காகச் சட்டைகக்கி வாலையாமே

விளக்கவுரை :


கெந்தகத்தயிலம்

770. ஆமின்னங்கெந்தகத்தின் தயிலம்சொல்வேன் அப்பனேகெந்தகந்தான் பலமும்பத்து
காமின்னங்கற்றாழைக்குள்ளேவைத்து கடுஆவின்நெய்ப்பாலிற் சுத்திப்பண்ணி
தேமின்னங்கல்வத்திலிதனைப்போட்டுச் சிறப்பான குருக்த்திவிரையைவாங்கி
ஓமின்னமயிற்கொன்றை விரையினூடே உற்பனமாய்ச் சமனாக்கி வெங்காய்ச்சாறே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 761 - 765 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

761. ஊட்டியே மேல்சட்டி கவிழ்ந்துமூடி உத்தமனே மாமிசத்தால் சீலைசெய்து
நீட்டியே அடுப்பேற்றி எரிநேர்பாக நிலைத்தவுப்பு கையோடே சலந்தான்வீழும்  
காட்டியே புகைநின்றால் திராவகமும் நிற்கும் கலங்காதே முன்வைத்த சரக்கில்வார்த்து
சூட்டியே ரவியில்வைத்து கல்வத்திட்டு துடியாகத் திந்நீரைவாங்குவாங்கே

விளக்கவுரை :


762. வாங்குமே ஐந்துதரமூட்டிமூட்டி மறவாதே அரக்கான குப்பியிலேவாரு 
தேங்குமே மணற்கல்லு ரோமமத்தி சிறப்பான நவலோக மெல்லாம்சாம்பல்
எங்குமே மகத்திலந்த தூபம்பட்டால் எளிதிலே கண்களெல்லாம் கரைந்துபோகும்
பாங்குமே தூயமுகம் பார்த்துநின்று பதறாதே விறகைமெல்ல அடுப்பிற்போடே

விளக்கவுரை :

[ads-post]

763. போட்டிடு தூரத்தேநின்று கொள்ளுபுகைமேலே பட்டுதென்றால் சடம்விரிந்துபோகும்
வாட்டிட்டு சரக்குதனில் ஏத்துப்போட மகத்தான மெழுகுமாகும்
நீட்டிட்டு ஏறவென்றே கிளிஞ்சல்தன்னை நீரோடேயுவமண்ணுந்தன்னிலேபோட்டு
காட்டிட்டு அடுப்பேற்றி எரித்துவாங்கி கனபுடமாய்ப் போட்டெடுத்து தூளாய்ப்பண்ணே

விளக்கவுரை :


764. பண்ணியே திராவகத்தில் இதனைப்போட்டு பதறாமே மூன்றுநாள் கழிநதபின்னே
நண்ணியே கல்வத்தில் அரைத்துருட்டி நலமாக அகலிலிட்டு புடத்தைப்போடு
கண்ணியே ஐந்துதரம் திராவகத்தி லரைத்துக் கடுகியே புடமைந்து கடுகித்தீரு
திண்ணியே பொடியாக்கிப் பீங்கானில் வைத்து சிற்பம்போல் சாரமொரு கட்டிவாங்கே

விளக்கவுரை :


சாரக்கட்டுச்சுன்னம்

765. வாங்கியொரு கலசத்தில் பொடிக்கீழிட்டு வாகான சாரமென்ற கட்டிவைத்து
தேங்கியே மேலுமிந்தப்பொடியைப் போட்டுச் சிறப்பாக மேல்மூடிசீலைசெய்து
தாங்கியே ஐந்தெருவிற் புடத்தைப்போடு தயங்காதே ஆறவிட்டு எடுத்துக்கொண்டு
ஓங்கியே பொடியெல்லாம் பொடித்துக்கொண்டு உத்யமனே முன்போல கட்டிவையே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 756 - 760 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

756. காயவைத்துச் சுட்டுமே சாம்பலாக்கி கலங்காதே வெவ்வேறாய்த் தண்ணீர்கரைத்து
தோயவைத்து மூன்றுநாள் தெளிவைவாங்கி சகமாக அடுப்பெறித்து உப்பாய்க்காய்ச்சி
மேயவைத்து ஒவ்வொன்றாய்க் காய்ச்சி வெவ்வேறு நெகிழாமல் ஒவ்வொன்று பலமுந்தூக்கி
சாயவைத்து மானினொடு ஆடுபானை ஒட்டையொடு வழுதைதானே

விளக்கவுரை :


757. தானென்ற குதிரையொடு மாடுயேழும் தனித்தனியே நீர்வாங்கி உரைப்பாய்க்காச்சி
வானென்ற ரெண்டுபலந்தூக்கிக்கொண்டு வளமான முயல்புழுக்கை யெலிப்புழுக்கை
தேனென்ற வவ்வாலின் புழுக்கையோடு சிறப்பாக இவைமூன்றும் சுட்டசாம்பல்
வானென்ற ரெண்டுபலம் கடல்நீர்தண்ணில் கரைத்திறுத்தெளிவிறுத்து உப்பாய்க்காச்சே

விளக்கவுரை :

[ads-post]

758. காச்சியது பலம்பத்து நிறுத்திக்கொண்டு கடிதான வீரமது பலமுமூன்று
காய்ச்சியே தாளகமும் பலமுமூன்று தயங்காத சிலையதுவும் பலமுமூன்று
பாய்ச்சியே வெள்ளையது பலமுமூன்று பரிவான கெந்தகமும் பலமுமூன்று
வாச்சியே துத்தமது பலமுமூன்று மகத்தான பேதியது பலந்தானாறே   

விளக்கவுரை :


759. ஆறாகச் சாரமது பலந்தானாறு அடைவான கல்லுப்பு பலந்தானாறு
ஏறாக இந்துப்பு பலந்தானாறு எளிதான வளசிலுப்பு பலந்தானாறு
பேராக வெண்காரம் பலந்தானாறு பெலத்துநின்ற சத்தியென்ற சாரமாறு
நீராகப் பூநீறு பலந்தானாறு நிலைத்த கெந்தியுப்பதுவும் பலந்தானெட்டே

விளக்கவுரை :


760. எட்டாத கடல்நுரைதான் பலமுமெட்டு இயல்பான துரிசியது பலந்தானெட்டு
காட்டாத வெடியுப்பு பலந்தானாறு கலங்காத சீனமது பலமுமாறு   
தெட்டாத பரங்கியுட சாரால்வார்த்து சிறப்பாக ஏழுநாள் அரைத்துலர்த்து
பட்டாத ஐந்துபங்கு பண்ணிவைத்து பக்குவமாயொருபங்கு கலயத்தூட்டே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 751 - 755 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

சந்திரோதயம்

751. போட்டரைத்து தினமொன்று ரவியில்போட்டு ப் பொடியாரைக் காசிபென்ற மேருக்கேற்றி
நீட்டரைத்து வாலுயின் மேலேவைத்து நினைவாகத்தீயிடுவாய் பனிரெண்டுசாமம்
கூட்டரைத்து ஆறவிட்டு எடுத்துப்பாரு கொடியான மாதளம்பூ நிறம்போல்நிற்கும்
தொட்டரைத்து சந்திரோதயம் என்றநாமந் துலங்கி இதன்மகிமை சொல்லமுடியாதாமே

விளக்கவுரை :


752. முடியாத செந்தூரம் குன்றியுண்ண முனையான காயமது சிவந்துமின்னும்
பிடியாத மதயானை பிளிறுக் கொக்கும் பெண்களுடன் அதுபோல பண்ணினாக்கால்
துடியாத நூறுபேர்வேணும்வேணும் சுக்கிலந்தானூறுகின்ற கேணியாகும்
அடியாத நேரமெல்லாம் அறுத்துப்போடும் அம்மம்மா செண்பகத்தின் கண்போலாமே

விளக்கவுரை :

[ads-post]

753. ஆமிந்தச் செந்தூரம் ஆயிரத்துக்கொன்று அனைந்திடவே இரபத்தைந்து மாற்று
போமிந்த சரக்குகளிற் போட்டுப்போட்டுப் புகழாகக்கட்டுண்டு மெழுகுமாகும்
காமிந்த துரிசியின்மேல் நீராலப்பி கடுரவியிற் போட்டிடவே குருவுமாகும்
வாமிந்த துரிசியினால் சூதங்கட்டும் மகத்தான லிங்கமது ஒருபலந்தான் 

விளக்கவுரை :


754. ஒருபலந்தான் கட்டியாய் வாங்கிக்கொண்டு உத்தமனே அயச்சட்டிக்குள்ளேவைத்து
சுருபலந்தான் சுருக்கிடவே மெழுகாய்ப்போகும் சூட்சாதி வேதைகள் கோடியுண்டு
கருபலந்தான் ரவிமதியஞ்சேர்த்து கண்காணா மாற்றதுவும் அதிகங்காணும்
நிருபலமாய் நவலோகம் நூற்றிலீய நிச்சயமாய் மாற்றென்ன பனிரெண்டாமே

விளக்கவுரை :


மகாதிராவகம்

755. ஆமப்பா திராவகத்தை சொல்வேனப்பா அப்பனே எருக்கோடு குப்பைமேனி
போமப்பா தாழையொடு அறுகுவாழை போரான மத்தையொடு துத்திகள்ளி
தாமப்பா தென்னிலையும் நாயுரு நாணல் தயங்காத பிரண்டையொடு முடக்கொத்தானும்
சாமப்பா புரசோடு முள்ளங்கத்திப்புல் தயங்காதே காயவைத்துச் சாம்பலாக்கே

விளக்கவுரை :


Powered by Blogger.